சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

சின்னத்திரை பிரபலங்களான மதன் - ரேஷ்மா ஜோடி தங்கள் காதல் குறித்து வெளிப்படையாக அறிவித்தனர். இது குறித்து கேள்விக்கு பதிலளித்துள்ள அவர்கள் வேலைக்காக ஏன் காதலை மறைக்க வேண்டும் என கூறினர்.
சின்னத்திரையில் பிரபலமான மதன் - ரேஷ்மா இருவரும், ஜீ தமிழில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலில் நடித்து பிரபலமாயினர். இவர்கள் இருவரும் தங்கள் காதல் விவகாரம் குறித்து கடந்த ஜனவரி மாதம் வெளியுலகிற்கு தெரிவித்தனர்.
தற்போது கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகும் "அபி டெய்லர்" தொடரில் ஜோடியாக நடித்து வரும் இருவரிடமும் சமீபத்தில் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் சினிமா நடிகர், நடிகைகள் தங்களுடைய ரிலேஷன்ஷிப்பை வெளிப்படையாக கூறாதபோது, நீங்கள் எப்படி சொன்னீர்கள்? என்ற கேள்வி எழுப்பபட்டது.
அதற்கு பதிலளித்த மதன் - ரேஷ்மா ஜோடி,வேலைக்காக காதல் வாழ்க்கையை ஏன் மறைக்க வேண்டும்?. அதேநேரம் தங்களுடைய தனிப்பட்ட விருப்பங்களை மறைப்பதிலும் தவறு ஒன்றும் இல்லை. என கூறினர்.
மேலும், தங்களுடைய வாழ்க்கையை சமூகவலைதள பக்கங்கங்களில் பகிர்ந்து கொள்வதில் தாங்கள் மகிழ்ச்சியடைவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.




