2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவில் விஜய் சேதுபதி, ஆர்யா என சில நடிகர்கள் ஹீரோ, வில்லன் என இரண்டு விதமான வேடங்களிலும் நடித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் ஜெய்யும் இணைந்துள்ளார். பத்ரி இயக்கத்தில் சுந்தர்.சி தயாரித்து, நாயகனாக, நடித்து வரும் படத்தில் வில்லனாக நடிக்கிறார் ஜெய். இந்த படத்தின் ஆக்சன் காட்சி படமாக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக ஜெய்யின் வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஆனபோதிலும் ஸ்பாட்டிலேயே பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு தொடர்ந்து ஆக்சன் காட்சியில் நடித்துள்ளார் ஜெய். இந்த தகவலை ஜெய்யும் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார். இப்படம் தவிர பிரேக்கிங் நியூஸ், எண்ணித்துணிக,சிவ சிவ என மேலும் சில படங்களிலும் ஜெய் நடித்து வருகிறார்.