மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குனரின் அடுத்த படம் | காதல் கொண்டேன் 2 வரும் : சோனியா அகர்வால் தகவல் | ஒரே வாரத்தில் 17 மில்லியன் பார்வைகளைப் பெற்ற 'மோனிகா' பாடல் | எளிமையாக நடந்த தலைவன் தலைவி வெற்றி விழா | ‛எக்ஸ்க்ளூசிவ்' போட்டும் இறங்கிப் போன 'வார் 2' | அமெரிக்காவில் 6 மில்லியன் வசூலித்த 'கூலி' | அரசு பேருந்து ஓட்டி தொகுதி மக்களை குஷிப்படுத்திய பாலகிருஷ்ணா | பெண்கள் பொறுப்பு குறித்த சர்ச்சை பேச்சால் கண்டனத்துக்கு ஆளான விக்ரம் பட வில்லன் | சூர்யா 46 படத்தில் இணைந்த பாலிவுட் நடிகர்! | அட்லி, அல்லு அர்ஜுன் படத்தில் இணைந்த ரம்யா கிருஷ்ணன்! |
தமிழ் சினிமா முடங்கி ஏறக்குறைய ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்டது. கொரோனா முதல் அலைக்குப் பின் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும், அந்த ஒரு சில மாதங்களில் ஓடியதே ஒன்றிரண்டு படங்கள் தான். முன்னணி கதாநாயகர்கள் நடித்த படங்களே தியேட்டர்களில் திட்டமிட்டபடி வராமல் தவித்துக் கொண்டிருக்க இருக்கும் ஒன்றிரண்டு காமெடி நடிகர்களும் கதாநாயகர்களாக மாறிவிட்டார்கள். அதனால், தமிழ் சினிமாவில் தற்போதைக்கு காமெடியில் பெரிய வெற்றிடம் ஏற்பட்டுள்ளது.
வடிவேலு, சந்தானம், யோகி பாபு ஆகியோரைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் 'விடுதலை' படத்தின் மூலம் நகைச்சுவை நடிகர் சூரி கதாநாயகனாக உயர்ந்துவிட்டார். அவரைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் 21வது படத்தில் சதீஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படி அடுத்தடுத்து நகைச்சுவை நடிகர்கள் நாயகர்களாக மாறி வரும் நிலையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களுக்கான பஞ்சம் ஏற்பட்டுள்ளது.
வடிவேலு, சந்தானம் ஆகியோருக்குப் பிறகு தமிழ் சினிமாவில் நிலையான ஒரு இடத்தை வேறு எந்த ஒரு காமெடி நடிகரும் பிடிக்கவில்லை. அவர்களது படக்காட்சிகள் தான் மீம்ஸ் வடிவில் இன்று சமூக வலைத்தளங்களில் அதிகம் சுற்றி வருகிறது. அதை வைத்தே அவர்கள் ரசிகர்களை எந்த அளவிற்கு கவர்ந்துள்ளார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
யோகி பாபு, சூரி, சதீஷ் ஆகியோர் இடம் பெற்ற மீம்ஸ்கள் மிக மிகக் குறைவு. நகைச்சுவை நடிகர்களாக ரசிகர்களின் மனதில் நிரந்தர இடம் பிடிப்பதற்கு முன்பாகவே அவர்கள் தங்களை ஹீரோக்களாக மாற்றிக் கொண்டார்கள். இருப்பினும் தவிர்க்க முடியாத சில சூழலில் சில முன்னணி நடிகர்களின் படங்களில் மட்டும் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்கள்.
தங்களுக்கான தடத்திலிருந்து மாறுவது தவறில்லைதான், அதை சரியாக அமைத்துக் கொண்டால் பரவாயில்லை என திரையுலகில் கிசுகிசுக்கிறார்கள்.