கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

தமிழ், தெலுங்கு மொழிகளில் நான்கு வருடங்களுக்கு முன்பு அடுத்தடுத்து 'பிக்பாஸ்' நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். கடந்த வருடம் கொரோனா அலையின் காரணமாக வழக்கமான மாதத்திலிருந்து சில மாதங்களுக்குப் பிறகுதான் நான்காவது சீசன் நிகழ்ச்சி நடந்தது.
இந்த வருடத்திற்கான ஐந்தாவது சீசன் தெலுங்கில் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ளதாகத் தெரிகிறது. அதற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறதாம். செப்டம்பர் முதல் வாரத்தின் நிகழ்ச்சி ஒளிபரப்பாகலாம் என்கிறார்கள். இந்த சீசனையும் நடிகர் நாகார்ஜுனா தான் தொகுத்து வழங்கப் போகிறார்.
தமிழில் கமல்ஹாசன் இந்த வருட 5வது சீசனைத் தொகுத்து வழங்க தேர்தலுக்கு முன்பாகவே அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், தமிழில் நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள் ஆரம்பமாகியதா இல்லையா என்பது குறித்து தகவல் இல்லை.
சென்னை, பூந்தமல்லி அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் தான் நிகழ்ச்சிக்கான அரங்கம் இருக்கிறது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் அங்கு மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சி அனுமதியில்லாமல் நடத்தப்பட்டது தெரிந்ததும் அந்த ஸ்டுடியோவுக்கு அரசு தரப்பில் 'சீல்' வைத்தார்கள். மலையாள பிக்பாஸ் இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில் ஒளிபரப்பு அப்படியே நிறுத்தப்பட்டது.
அந்த 'சீல்' விவகாரத்தை முடித்த பிறகுதான் தமிழில் 5வது சீசன் பற்றி தகவல் வெளிவரும் என்கிறார்கள்.