பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

பிரபல ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாச வீடியோக்கள் தயாரித்து அதனை மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து பரப்பிய வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆபாச படங்களை வெளியிட்டு அதன் மூலம் பணம் சம்பாதித்த ராஜ் குந்த்ரா, வியான் என்ற நிறுவனத்தை நடத்தி வந்தார். அதில் ஏராளமான அன்னிய செலாவணி பரிவர்த்தனையில் ராஜ் குந்த்ரா ஈடுபட்டது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில் பங்குச் சந்தையில் பெரிய மோசடியாக கருதப்படும் உள் வர்த்தகத்தில் ஈடுபட்டதற்காக ஷில்பா ஷெட்டி, ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான வியன இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்துக்கு பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி 3 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
பங்குச் சந்தையில் பட்டியிலிடப்பட்டுள்ள ஒரு நிறுவனத்தின் உள்ளே உள்ள ஒருவரின் துணை கொண்டு அதன் நிதி மற்றும் நிர்வாகத் தகவல்கள், ரகசியங்கள் ஆகியவற்றை அறிந்து கொண்டு, அதற்கேற்றாற் போல பங்குச் சந்தையில் அந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கி விற்பது 'உள் வர்த்தகம்' எனப்படுகிறது. உலகின் மிகப் பெரும்பாலான நாடுகளில் இது மோசடிச் செயலாகக் கருதப்பட்டு தடை செய்யப்பட்டுள்ளது.
செபி உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, ராஜ் குந்த்ரா, ஷில்பா ஷெட்டி மற்றும் அவர்களது நிறுவனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை வியான் இண்டஸ்ட்ரீஸின் நிவாகிகளான ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி இருவரும் தான் செலுத்த வேண்டும். இந்த நிறுவனம்செப்டம்பர் 1, 2013 முதல் டிசம்பர் 23, 2015 வரையிலான காலத்தில், பங்குச்சந்தையில் உள் வர்த்தக முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. 2015 ஆம் ஆண்டில், வியான் இண்டஸ்ட்ரீஸ் நான்கு நபர்களுக்கு 5 லட்சம் மதிப்புள்ள பங்குகளை முன்னுரிமை ஒதுக்கீடு செய்தது மற்றும் இந்த முன்னுரிமை ஒதுக்கீட்டில், நிறுவனம் அதன் இரண்டு விளம்பரதாரர்கள் அதாவது ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டிக்கு தலா 128,800 பங்குகளை ஒதுக்கியது.
செபியின் இன்சைடர் டிரேடிங் ப்ராபிஷன் இன்சைடர் டிரேடிங்ஸ், 2015 இன் விதிமுறை 7 (2) (அ) படி, நிறுவனத்தின் விளம்பரதாரர்கள் இரண்டு நாட்களுக்குள் நிறுவனத்திற்கு தங்கள் பரிவர்த்தனையை வெளிப்படுத்த வேண்டும். இரண்டு வர்த்தக நாட்களுக்குள் பங்குச்சந்தைகளுக்கு வெளிப்படுத்துதலை அனுப்பவில்லை. ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டியின் பங்கு பரிவர்த்தனை மதிப்பு தலா ரூ 2.57 கோடி ஆகும். எனவே முறைகேட்டில் ஈடுபட்டது உறுதியாகிறது. இந்த நோட்டீசு கிடைத்த 45 நாட்களுக்குள் அபராதம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு செபி கூறியுள்ளது.