2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா பெண்களை வைத்து ஆபாச படம் எடுத்து கோடிக் கணக்கில் பணம் சம்பாதித்த விவகாரம் பாலிவுட்டையே கலக்கி வருகிறது. கோடி கணக்கில் பணம் வைத்திருக்கும் இவர் ஏன் இந்த இழிவான காரியத்தில் இறங்கினார் என்று பலரும் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
தற்போது போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள ராஜ் குந்த்ரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மனைவி ஷில்பா ஷெட்டி என் கணவர் ஆபாச படம் எடுக்கவில்லை என்று ஒரு புறம் கணவருக்கு பரிந்து பேசினாலும், இன்னொரு பக்கம் கணவரால் என் வாழ்க்கை, மரியாதை எல்லாம் போச்சு என்றும் அழுது புலம்பிக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில் ராஜ் குந்த்ராவின் ஆபாச பட விவகாரங்கள் நிச்சயம் ஷில்பா ஷெட்டிக்கு தெரிந்திருக்கும், அவர் இதற்கு உதவி இருக்க கூடும். அல்லது கண்டு கொள்ளாமல் இருந்திருக்க கூடும். இரண்டுமே சட்டப்படி தவறானது. எனவே குற்றவாளிக்கு உதவியவர் அல்லது குற்றத்தை மறைத்தவர் என்கிற வகையில் விரைவில் ஷில்பா ஷெட்டி கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இதற்கிடையில் வங்கி கணக்கு விபரத்தையும், கணவரின் நடவடிக்கை குறித்த ஷில்பாவின் வாக்குமூலத்தையும் எழுத்து வடிவில் கேட்டிருக்கிறது போலீஸ். ஏற்கெனவே ஒரு முறை போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். தேவைப்பட்டால் மீண்டும் விசாரிக்க திட்டமிட்டு உள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள போலீஸ் உயர் அதிகாரி, "நடிகை ஷில்பா ஷெட்டிக்கு தற்போதைய தருணத்தில் குற்றமற்றவர் என்ற நற்சான்று வழங்க முடியாது" என்று கூறியுள்ளார். இந்த நிமிடம் வரை ஷில்பா ஷெட்டிக்கு நேரடியான தொடர்பு இருப்பதற்கான ஆதாரம் எதுவும் சிக்கவில்லை. சிக்கினால் அடுத்த நிமிடமே கைது செய்யப்படுவார் . என்கிறார்கள்.