ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
அவ்வப்போது சர்ச்சைக்குரிய வகையில் எதையாவது பேசி சிக்கலை இழுத்துக் கொள்பவர் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத்.. சில விஷயங்களில் கோபமாகும் எதிர் தரப்பினர் கண்கனாவுக்கு எதிராக நீதிமன்றத்தின் படியேறி விடுகின்றனர். அப்படித்தான் பாலிவுட் எழுத்தாளர் ஜாவேத் அக்தரை பற்றி மீடியா ஒன்றில் கங்கனா பேசப்போக, அதை தொடர்ந்து அவர் மீது மும்பை பெருநகர நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடர்ந்தார் ஜாவேத் அக்தர்.
ஆனால் கங்கனாவோ நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. இந்தநிலையில் நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கங்கனாவின் வழக்கறிஞரிடம், அடுத்தமுறை கங்கனா நேரில் ஆஜாராக வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயமாக கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என கடுமை காட்டியுள்ளார் நீதிபதி.
தற்சமயம் பாஸ்போர்ட் புதுப்பிக்க விண்ணப்பித்திருக்கும் கங்கனா தன் மீதுள்ள வழக்குகள் காரணமாக பாஸ்போர்ட் புதுப்பித்தலை தடுக்க கூடாது என உத்தரவிடும்படி மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார். ஆனால் பாடகர் ஜாவேத் அக்தர் தன்மீது தொடர்ந்திருந்த இந்த அவதூறு வழக்கை தனது மனுவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டார்.
இதனால் கங்கனாவின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என ஜாவேத் அக்தர் கோரிக்கை வைக்க, அந்த கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஆனால் அந்த சந்தோஷத்தை கங்கனா அனுபவிப்பதற்குள் இன்னொரு நீதிமன்றம் அவருக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கும் அளவுக்கு கடுமை காட்டியுள்ளது கங்கனா தரப்பை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.