பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா இளம் பெண்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தருவதாக கூறி அவர்களை பயன்படுத்தி ஆபாச படம் உருவாக்கி, அதனை மொபைல் செயலியில் வெளியிட்டதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்னர் மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில் ராஜ் குந்த்ராவின் ஆபாச படங்களில் நடித்த நடிகைகள் போலீசாரிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளனர். தங்களை மிரட்டி போலீசில் சிக்க வைத்துவிடுவதாக கூறி கட்டாயப்படுத்தி, ஆபாச படங்களில் நடிக்க வைத்ததாக போலீசில் அவர்கள் தெரிவித்துள்ளனர். கொரோனா காலத்தில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்ததாகவும், அந்த நேரத்தில் வெப் தொடர்களில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாக நடிகை கெஹானா தெரிவித்ததால் அவருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அதனை பயன்படுத்தி தங்களை ஆபாச படங்களில் நடிக்க வைத்துவிட்டதாகவும் போலீசாரிடம் இரண்டு நடிகைகள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.
இது தொடர்பாக 25 வயது நடிகை ஒருவர் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 'நான் இந்தி, மராத்தி, போஜ்புரி படங்களில் சிறிய வேடங்களில் நடித்து வந்தேன். ரவுனக் என்ற இயக்குநர் மூலம் சில வாய்ப்புக்கள் கிடைத்தன. பிப்ரவரி 4ம் தேதி அவரும் வேறு ஒரு பெண்ணும் என்னை சந்தித்தனர். அப்பெண்ணை இயக்குநர் என்று அறிமுகம் செய்து வைத்தனர். அவர்கள் என்னை மலாடு மத் தீவிற்கு அழைத்து சென்று சிங்கிள் மதர் என்ற குறும்படத்தில் நடிக்க வேண்டும் என்று கூறி கதையை என்னிடம் கொடுத்தனர். நான் நடிக்க தயாரான போது இந்த கேரக்டருக்கு நீங்கள் ஒத்து வரமாட்டீர்கள் என்று கூறி வேறு ஒரு கதையை கொடுத்தனர். அதை படித்து பார்த்துவிட்டு அதிர்ச்சியாகி அதில் நடிக்க முடியாது என்று சொன்னேன்.
ஆனால், பணம் வேண்டும் என்றால் இதில் நடித்தே ஆக வேண்டும் என்றும், இது எந்த சேனலிலும் ஒளிபரப்பு செய்யப்படாது என்றும், எனது தோற்றம் மற்றும் பெயரை மாற்றிவிடுவோம் என்றும் தெரிவித்தனர். நானும் அதில் நடித்தேன். ஆனால், முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்தவுடன் நிர்வாணமாக நடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். அதற்கு மறுத்தேன். உடனே இப்படத்திற்காக நாங்கள் அதிக அளவு செலவு செய்துவிட்டோம் என்றும், இதில் நடிக்கவில்லை என்றால் அதற்கு ஆன செலவை என்னிடமிருந்து வசூலிப்போம் என்று மிரட்டினர். இதனால் வேறு வழியின்றி அரை நிர்வாணத்துடன் நடிக்க சம்மதித்து, நடித்த போது போலீசார் வந்துவிட்டனர்'. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இதே போன்று 20 வயதாகும் புதிய நடிகை ஒருவர் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது, 'கொரோனா காலத்தில் பட வாய்ப்பு இல்லாமல் இருந்தேன். அப்போது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் நடிக்க ஆட்கள் தேவை என்று விளம்பரம் வந்தது. அதனை தொடர்பு கொண்டபோது வெப் தொடரில் நடிக்க வாய்ப்பு கொடுப்பதாகக் கூறினர். அவர்கள் என்னை மலாடு மத் தீவிற்கு அழைத்து சென்று ராஜா, ராணி தொடர்பான கதை என்று கூறினர். ஆனால் சில காட்சிகள் படப்பிடிப்பு நடத்திய பிறகு ஆபாசமாக நடிக்கும் படி கேட்டுக்கொண்டனர்.
நான் மறுத்த போது இந்த படப்பிடிப்புக்கு 10 லட்சம் செலவாகி இருப்பதாகவும், அந்தப் பணத்தை என்னிடம் வசூலிக்க இருப்பதாக நடிகை கெஹானா மிரட்டினார். இதனால் வேறு வழியில்லாமல் நடிக்க வேண்டியதாகிவிட்டது" என்று தெரிவித்தார்.
இதில் நடிக்க அவருக்கு ரூ.10 ஆயிரம் கொடுத்துள்ளனர். இது போன்று 100 ஆபாச குறும்படங்களை தயாரித்து மொபைல் ஆப்களில் பதிவேற்றம் செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர். நடிகை கெஹானா எடுத்த இந்த ஆபாச படங்கள் ராஜ் குந்த்ராவின் நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது.