பழம்பெரும் ஹிந்தி நடிகை சுலோச்சனா லட்கர் மறைவு : பிரதமர் இரங்கல் | தமிழ் சினிமாவில் மீண்டும் த்ரிஷா அலை | ஜுன் 9ம் தேதி போட்டியில் 'போர் தொழில், டக்கர்' | பானி பூரி: தமிழில் தயாராகும் புதிய வெப் தொடர் | சினிமா ஆகிறது முதல் போஸ்ட்மேன் கதை | பிம்பிளிக்கி பிலாப்பி: பிரான்ஸ் நாட்டின் லாட்டரி பின்னணியில் உருவாகும் படம் | 24 ஆண்டுகளுக்கு பிறகு படம் இயக்கும் பாரதி கணேஷ் | 2018 படத்தில் முதலில் நடிக்க மறுத்தேன் : டொவினோ தாமஸ் | எனக்கு கேன்சர் என்று சொல்லவில்லை : சிரஞ்சீவி விளக்கம் | கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற சுரேஷ்கோபியின் மகள் |
ஆனந்த் சங்கர் இயக்கத்தில் விஷால், ஆர்யா மற்றும் பலர் நடிக்கும் 'எனிமி' படத்தை தன் மினி ஸ்டுடியோஸ் சார்பில் தயாரித்து வருபவர் வினோத்குமார். அவரது முதல் தயாரிப்பான சமுத்திரக்கனி நடிப்பில் சுப்பிரமணிய சிவா இயக்கத்தில் உருவான 'வெள்ளை யானை' இரண்டு வாரங்களுக்கு முன்பு டிவியில் நேரடியாக வெளியானது. அவர் இணைந்து தயாரித்துள்ள மற்றொரு படமான ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துள்ள 'திட்டம் இரண்டு' நாளை மறுதினம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
தனது டுவிட்டரில் அடிக்கடி அரசியல் கலந்த பதிவுகளையும் பதிவிடுபவர் வினோத்குமார். இன்று காலை அவரது டுவிட்டரில், “பின்னால் அசிங்கமாகப் பேசிவிட்டு, முன்னால் அன்பைப் பரப்புபவர்களை, மக்கள் வழிபடுகிறார்கள்,” என யாரையோ குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார்.
இன்று தனுஷ் அவருடைய பிறந்தநாளைக் கொண்டாடி வரும் நாளில் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான உண்டர் பார் பிலிம்ஸில் ஆல் இன் ஆலாக இருந்தவர் தான் வினோத் குமார். தனுஷுடன் சண்டையிட்டுத்தான் அவரை விட்டு பிரிந்தார் என்பது கோலிவுட்டின் தகவல்.
ஆனால், இன்று தனுஷின் பிறந்தநாளுக்கு வினோத் எந்த வாழ்த்தும் சொல்லவில்லை. அதே சமயம், தனுஷின் 43வது படப் போஸ்டரை ரிடுவீட் செய்துவிட்டு அப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தற்போது சந்தோஷ் பி ஜெயகுமார் இயக்கத்தில் பிரபுதேவா நாயகனாக நடிக்கும் படத்தையும் வினோத் தயாரித்து வருகிறார்.