''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
நடிகர், நடிகைகள் பார்ட்டி பண்ணுவது ஒன்றும் புதிதல்ல. சர்ச்சைகள், வழக்குகள் பலர் மேல் இருக்கின்றன. கொரோனா காலத்தால் பெரிய அளவில் மக்களும் சரி, திரைப்பிரபலங்களும் சரி வெளியில் தலைக்காட்டாமல் வீட்டிற்குள் முடங்கி கிடந்தனர். தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் பார்ட்டி என திரைப்பிரபலங்கள் பலரும் கிளம்பிவிட்டனர்.
கடந்த சனிக்கிழமை நள்ளிரவு நடிகை யாஷிகா ஓட்டி சென்ற கார் விபத்துக்குள்ளானது. இது கோடம்பாக்கம் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியது. இரண்டு ஆண் நண்பர்கள் மற்றும் ஒரு பெண் தோழியுடன் புதுச்சேரியில் இருந்து சென்னை வரும் வழியில் மகாபலிபுரம் அருகே சூளேரிக்காடு என்ற கிராமத்தில் சாலையின் சென்டர் மீடியனில் மோதி, கார் கட்டுப்பாட்டை இழந்து, உருண்டு பெரும் விபத்துக்குள்ளானது.
யாஷிகா ஆனந்த் இந்தத் காரை ஓட்டி வந்ததாக சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட 129 கிலோமீட்டர் வேகத்தில் காரை ஓட்டி வந்திருக்கிறார். அவர் பயன்படுத்திய புதிய கார் டாடா ஹரியர் x2A பிளஸ் என்ற டீசல் கார். அவரது அம்மா பெயரில் வாங்கியிருக்கிறார். காரில் அத்தனை பாதுகாப்புகள் இருந்தும் யாஷிகா மற்றும் அவரது தோழி பவானி சீட் பெல்ட் அணிய வில்லை என்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அதனாலேயே யாஷிகா பலத்த காயமடைந்துள்ளார். நண்பர்களான சையத், அமீர் இருவரும் சீட் பெல்ட் அணிந்ததால் அவர்களுக்கு பெரிய அளவில் காயம் இல்லை.
யாஷிகா அம்மா கூறும்போது, ‛‛யாஷிகா காரை ஓட்டி வந்து இருக்கிறார் என்றும், தோழி இறந்தது அவருக்கு தெரியாது என்றும் சொல்கிறார். யாஷிகாவின் இரண்டு காலில் அறுவை சிகிச்சை செய்து உள்ளது என்றும் வயிற்றுப் பகுதிகளிலும் நிறைய காயங்கள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அவர் எழுந்து நடக்கவே கிட்டத்தட்ட மூன்று மாதம் ஆகும் என மருத்துவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார்.
அவருடைய தோழி பவனி விபத்து நடந்த அடுத்த நாள் அமெரிக்கா செல்வதற்கு விமான டிக்கெட்டும் வைத்திருந்திருக்கிறார். ஆனால் விதி அவரை இழுத்து சென்றுள்ளது. காரில் மேற்கூரை ஓப்பன் செய்யும் வசதி கொண்டது. இதனால் பாடல்களை சத்தமாக இசைத்துக் கொண்டு மேற்கூரையில் நின்று பாட்டு பாடி வந்திருப்பதாக விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர். இதனால் கார் கட்டுப்பாட்டை இழந்தபோது பவனி தூக்கி வீசப்பட்டு சில மணி நேரங்கள் ஆகியும் அவரை யாரும் கண்டு கொள்ளாததால் அவர் இறந்து விட்டார் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. யாஷிகாவின் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டு அவர் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
யாஷிகா தொடர்ந்து பார்ட்டி போவதாக விமர்சனம் செய்யப்பட்டு வந்தன. கிளாமரில் பல புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். பிக்பாஸ் பிறகு பல படங்கள் புக் ஆகின. இவன் தான் உத்தமன், ராஜபீமா கடமையை செய், பாம்பாட்டம், சல்பர் ஆகிய படங்கள் அவர் கைவசம் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில் யாஷிகா உயிர் பிழைத்ததே அரிதான நிலையில், அவர் நடித்த படங்களின் நிலை என்ன ஆகும், எப்படி படங்களை முடித்துக் கொடுப்பார் கேள்விகள் எழுந்துள்ளன. இவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் நிலை என்ன என்பது கேள்விக்குறியாக உள்ளது.
நடிகர், நடிகைகள் பெரும்பாலும் இதைப்போல் பார்ட்டி செய்கிறவர்கள் தன்னிலை மறந்தும் தங்களுடைய எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி விபத்துக்களை ஏற்படுத்துவதும் ஆக இருக்கின்றனர். இது பெரும் வருந்தக் கூடிய விஷயமாக உள்ளது என திரை துறையினர் பலரும் கவலை தெரிவித்துள்ளனர். யாஷிகாவை ஒரு உதாரணமாக எடுத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் பாதுகாப்புடன் பயணிக்க வேண்டும்.
ஈசிஆர்., சாலையில் அதிகளவில் ரிசார்ட்டுகள் இருப்பதால் பார்டி கலாச்சாரம் அதிகமாகி வருகிறது. குறிப்பாக சனி, ஞாயிறுகளில் இந்த கலாச்சாரம் அதிகமாகவே நடக்கிறது. நள்ளிரவு பார்டியை முடித்து, குடிபோதையில் வாகனத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதிவேகமாக செல்வோர் எண்ணிக்கையும் இந்த பகுதியில் அதிகமாகி வருகிறது. அதனால் தான் இந்த பகுதியில் அதிக விபத்துகள் நடப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதை போலீசார் கண்காணித்து குடித்து விட்டு வண்டி ஓட்டுபவர்கள், சாலையில் அதிவேகமாக செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.