''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
சினிமாவிலும், சின்னத்திரையிலும் பெண்களை மையப்படுத்தி கதாபாத்திரங்கள் படைக்கப்பட்டு வருவதை குறித்து பேசிய நடிகை நக்ஷத்திரா பெண்கள் இனி ஒதுக்கப்பட மாட்டார்கள் என கூறியுள்ளார்.
சின்னத்திரையின் பிரபல தொகுப்பாளியான நஷத்திரா நாகேஷ், சீரியலிலும், சினிமாவிலும் நடிகையாகவும் நடித்து புகழ் பெற்றவர். இவர் தற்போது "தமிழும் சரஸ்வதியும்" என்ற தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். சமீபத்த இவர் அளித்த பேட்டி ஒன்றில் தொலைக்காட்சி தொடர்களில் பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தார்.
அப்போது அவர் "டிவியில் மட்டுமல்ல, சினிமா மற்றும் பிற பொழுதுபோக்குகளிலும் சிறப்பாக எழுதப்பட்ட கதாபாத்திரங்களை நான் காண்கிறேன். பெண்களை மையமாக வைத்து எடுக்கும் கதாபாத்திரங்கள் இனி ஒதுக்கப்படாது என நம்புகிறேன். டி.வி மற்றும் சினிமா நம் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் சில சமயங்களில், திரையில் நாம் எவ்வாறு சித்தரிக்கப்படுகிறோம் என்பதற்கு நாமே பொறுப்பாகிறோம். ஆனால் நடிகர்களாகிய நாங்கள், நிகழ்ச்சியில் பதிவுசெய்ததையும், இயக்குனர் எங்களிடம் கேட்பதையும், ஸ்கிரிப்ட் கட்டளையிடுவதையும் மட்டுமே செய்ய வேண்டும். ஆனால், தற்போது ஒரு நிகழ்ச்சி, ஸ்கிரிப்ட் தயாரிக்கப்படும் விதம் மாறிக்கொண்டிருக்கிறது" என கூறினார்.