சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' |
சார்பாட்டா படத்தில் கமெண்ட்ரி கொடுக்கும் ரோலில் நடித்திருந்த டைகர் கார்டன் தங்கதுரை, சிறப்பாக பெர்பார்ம் செய்திருந்தார்.
தமிழில் வரும் ஸ்போர்ட்ஸ் படங்களில் கமெண்ட்ரி ரோல் செய்யும் நபர்களுக்கு படத்திலேயே பெரிதாக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அப்படியே சில படங்களில் முக்கியத்துவம் கொடுத்தாலும் திரையில் பெரும்பாலும் அவர்கள் காண்பிக்கப்படாததால் அந்த நபர்களுக்கான அங்கீகாரம் கிடைப்பதும் அரிது தான். ஆனால், எந்த வகையான விளையாட்டை எடுத்துக் கொண்டாலும் ஆட்டக்களத்தை உயிர்ப்போடு வைத்திருப்பவர்கள் கமெண்டேட்டர்கள் தான். அது போல ஒரு படத்தின் விளையாட்டு காட்சியை அதே உணர்ச்சிகளோடு பார்வையாளர்களிடம் கடத்துபவர்களும் இவர்களே.
உதாரணத்திற்கு ஆடுகளம் படத்தை எடுத்துக் கொண்டல் சேவல் சண்டையிடும் களத்தை காட்டும் போதெல்லாம் அல்வா வாசுவின் மதுரை தமிழ் நமது காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கும். அந்த அளவுக்கு போட்டி நடக்கும் காட்சியை, நிஜ களத்தில் நின்று பார்ப்பது போன்ற உணர்வை அல்வா வாசு நமக்கு தந்திருப்பார்.
அது போலவே, தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் சார்பட்டா படத்திலும் பாக்ஸிங் களத்தை நமக்கு லைவ்வாக காட்டுகிறார் டைகர் கார்டன் தங்கதுரை. சென்னை தமிழில் காட்சிக்கு ஏற்றார் போல், ஒட்டுமொத்த சண்டைக் காட்சிகளிலுமே அவரது குரல் தொடர்ந்து ஒலிக்கிறது. முந்தைய படங்களில் காமெடிக்காக அவர் கொடுத்த கமெண்ட்டுகள் ஒர்க் அவுட் ஆகவில்லை என்றாலும், சார்பட்டா படத்தில் அவரின் கமெண்ட்ரி பாராட்டுகளை பெறுகிறது.
இருப்பினும் இதற்கான அங்கீகாரம் தங்கதுரைக்கு கிடைத்ததா என்றால் வழக்கம் போல் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.