ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். கோலிவுட்டை தாண்டி ஹாலிவுட்டிலும் கால்பதித்துவிட்டார். அடுத்து நேரடி தெலுங்கு படத்திலும் நடிக்க உள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கும் ஒரு படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். நாயகியாக மாளவிகா மோகன் நடிக்க, ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு பெயர் வைக்காமல் தற்காலிகமாக தனுஷ் 43 என குறிப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில் தனுஷ் பிறந்தநாளான இன்று(ஜூலை 28) இப்படம் பற்றிய தலைப்புடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது. படத்திற்கு மாறன் என பெயரிட்டுள்ளனர். போஸ்டரில் தனுஷ் ஒருவரை கண்ணாடி மேஜையில் அடித்து துவம்சம் செய்வது போன்று உள்ளது. இதை வைத்து பார்க்கும்போது இப்படம் ஆக்ஷன் படமாக இருக்கலாம் என எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதற்கு முன் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன், கர்ணன், ஜகமே தந்திரம்(கிராமத்து ஸ்டைல் கலந்து) போன்ற படங்களில் கிராமத்து சாயலில் இருந்த தனுஷ் இப்படத்தில் ஸ்டைலிஷ் லுக்கிற்கு மாறி உள்ளார்.