இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்கினார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? |
தேவகவுடாவின், மதசார்பற்ற ஜனதா தளத்திலிருந்து (ம.ஜ.த.,) விலகிய, நடிகை பூஜா காந்தி, எடியூரப்பாவின், கர்நாடக ஜனதா கட்சியில் சேர்ந்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன், நடிகை பூஜா காந்தி, முன்னாள் முதல்வர் குமாரசாமி முன்னிலையில், ம.ஜ.த.,வில் இணைந்தார். அப்போது, அவர் நடித்த, "தண்டுபாளையா என்ற கன்னட திரைப்படம் வெளியாகி இருந்தது. இதில், அவரது நடிப்பு குறித்து, குமாரசாமி விமர்சித்திருந்தார். இதனால், வருத்தமுற்ற பூஜா காந்தி, ம.ஜ.த., விலிருந்து விலகினார்.
இந்நிலையில்,எடியூரப்பாவின் புதிய கட்சியான, க. ஜ.க., (கே.ஜே.பி.,)யில் இணைய, பூஜா காந்தி முடிவு செய்தார். இதற்காக, மல்லேஸ்வரத்திலுள்ள கே.ஜே.பி., அலுவலகத்துக்கு சென்று, அக்கட்சியில் தன்னை அதிகாரபூர்வாக இணைத்து கொண்டார்.முன்னதாக, எடியூரப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அதேநேரத்தில், பா.ஜ., வில் அதிருப்தியில் உள்ள நடிகைகள் ஸ்ருதி, மாலாஸ்ரீ ஆகியோரும், கே.ஜே.பி.,யில் இணைய நேரம் பார்த்து காத்திருக்கின்றனர்.