இப்ப, தமிழ் சினிமாவில் டாப் 5 ஹீரோயின் யார் தெரியுமா? | சூர்யாவின் ‛கருப்பு' ரிலீஸ் எப்போது? | ராஷ்மிகாவின் ‛மைசா' படத்தில் இணையும் புஷ்பா 2 வில்லன் | பராசக்தி படப்பிடிப்பு முடிவடைந்தது | நவம்பர் 21-ல் ரீரிலீஸ் ஆகும் ப்ரண்ட்ஸ் | லாபத்தில் முதலில் நுழைந்த 'பைசன்' | தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா |
தொண்ணூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன் படங்களில் நடித்து ஒரே வருடத்தில் புகழின் உச்சிக்கு சென்ற மதுபாலா, அதன் பிறகு தமிழை ஒதுக்கிவிட்டு இந்தி திரையுலகம் பக்கம் சென்றார். அதன்பிறகு சினிமாவில் வாய்ப்புகள் இன்றி ஒதுங்கி இருந்தார். பின்னர் 2012ல் பாலாஜி மோகன் டைரக்ஷனில் உருவான வாயை மூடி பேசவும் என்கிற படத்தின் மூலம் தமிழில் ரீ என்ட்ரி கொடுத்த கொடுத்தார் மதுபாலா.
தற்போது அறிமுக இயக்குனர் அரவிந்த் சீனிவாசன் இயக்கத்தில் அருள்நிதி நடிக்கும் 'தேஜாவு' என்கிற படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் மதுபாலா. இந்தப்படத்தில் அருள்நிதியும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். தெலுங்கு நடிகர் நவீன் சந்திராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப்படம் தமிழ் தெலுங்கு என இருமொழி படமாக உருவாகிறது.