ஐதராபாத் திரைப்பட நகரம் பற்றி கஜோல் பேச்சு : திரையுலகம் அதிர்ச்சி | தக் லைப் - கர்நாடகா வினியோகஸ்தர் விலகல்? | குத்துச்சண்டை வீரராகிறார் மஹத் | கிஷோர் ஜோடியாக இணைந்த அம்மு அபிராமி | மலேசிய பாடகர் 'டார்க்கி' நாகராஜா வாழ்க்கை சினிமா ஆகிறது | வெப் தொடராக ஒளிபரப்பாகிறது முன்னாள் பிரதமர் ராஜீவ் படுகொலை வழக்கு | பிளாஷ்பேக்: ஹீரோக்கள் ஆதிக்கத்தை வென்ற மாதுரி தேவி | பிளாஷ்பேக்: சினிமாவில் சிவகுமாரின் 60வது ஆண்டு: தீராத அந்த இரண்டு ஏக்கங்கள் | ராணாவை நள்ளிரவில் எழுப்பிய கட்டப்பா ; 'ராணா நாயுடு' வெப் சீரிஸுக்கு வித்தியாசமான புரமோஷன் | மோகன்லால் மம்முட்டி பட டைட்டிலை தவறிப்போய் வெளியிட்ட இலங்கை சுற்றுலாத்துறை |
இயக்குனர் மணிரத்னத்தின் கனவுப்படமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் இந்திய சினிமாவின் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் நடித்து வருகின்றனர். தவிர இந்தப்படம் வரலாற்று பின்னணியில் உருவாகிறது என்பதால் ஒவ்வொரு மொழியில் .இருந்தும் பிரபல குணச்சித்திர நடிகர்களும் இதில் பங்கேற்று நடித்து வருகின்றனர். அந்தவகையில் இந்தப்படத்தில் மலையாள வில்லன் நடிகர் பாபு ஆண்டனி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த தகவலை அவரே உறுதிப்படுத்தியும் உள்ளார்.
எண்பதுகளில் மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் பூவிழி வாசலிலே, சூரியன் உள்ளிட்ட பல படங்களில் வில்லன் நடிகராக வலம் வந்த பாபு ஆண்டனி, இதற்கு முன்னதாக 1990ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அஞ்சலி' படத்தில் வில்லனாக நடித்திருந்தார். கிட்டத்தட்ட முப்பது வருடங்கள் கழித்து மீண்டு அவரது டைரக்சனில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்துள்ளது ஆச்சர்யமான நிகழ்வுதான்.