இன்று முதல் ‛இட்லி கடை' டப்பிங் பணி துவங்குகிறது | ஜெய்யின் ‛சட்டென்று மாறுது வானிலை' | பிளாஷ்பேக் : உச்ச நட்சத்திரம் என்ற பட்டத்திற்கு அச்சாரமிட்ட ரஜினியின் “பைரவி” | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” |
ஒரு காலத்தில் இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா தான் என்ற அடையாளம் இருந்தது. ஆனால், ஹிந்தி சினிமாவை விட தென்னிந்திய மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றில் கடந்த சில வருடங்களாக பல சிறந்த, பிரம்மாண்ட திரைப்படங்கள் இந்திய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
இருப்பினும் தெலுங்குத் திரையுலகத்தில் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி, பாகுபலி 2' ஆகிய படங்கள் செய்த வசூல் சாதனையை மற்ற மொழிப் படங்கள் முறியடிக்க முடியவில்லை.
தமிழ்ப் படங்கள் தெலுங்கில் ரீமேக் ஆவதும், தெலுங்குப் படங்கள் தமிழில் ரீமேக் ஆவதும் காலம் காலமாக நடந்து வருகிறது. தனுஷ் நடித்த 'அசுரன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'நரப்பா' நேற்று ஓடிடி தளத்தில் வெளியானது. அசுரனை விட நரப்பா சிறப்பாக நடித்தாரா இல்லையா என்ற ஒப்பீடுடன் இன்று டுவிட்டரில் ஒரு விவாதம் ஆரம்பமாகி அது கடைசியில் 'டோலிவுட் Vs கோலிவுட்' சண்டையில் போய்க் கொண்டிருக்கிறது.
#KWoodDominatingIndia, #TwoodDominatingSouth, #TwoodDominatingIndianCinema ஆகிய ஹேஷ்டேக்குகளுடன் சண்டை காரசாரமாக போய்க் கொண்டிருக்கிறது.
ஒரு பக்கம் கமல்ஹாசன், ஏ.ஆர்.ரகுமான், ரஜினிகாந்த், தனுஷ் ஆகியோர் தமிழ் சினிமாவை உலக அளவில் புகழடைய வைத்துள்ளார்கள் என்று தமிழ் ரசிகர்களும், பிரபாஸ், ராஜமவுலி ஆகியோர் தெலுங்கு சினிமாவை இந்திய அளவில் புகழடைய வைத்துள்ளார் என்றும், இன்னும் மற்ற நடிகர்கள், இயக்குனர்கள் ஆகியோரை தனித் தனியே குறிப்பிட்டு நீண்டு கொண்டிருக்கிறது இந்த மோதல்.