சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தொண்ணூறுகளில் ரோஜா, ஜென்டில்மேன் என அடுத்தடுத்து இரண்டு ஹிட் படங்கள் மூலம் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை மதுபாலா. அதன்பிறகு தனக்கு கிடைத்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள தவறிய இவர் ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு சமீப வருடங்களாக அங்கொன்றும் இங்கொன்றுமாக படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வெப் சீரிஸ் பக்கம் கவனத்தை திருப்பி உள்ள மதுபாலா தற்போது வெளியாகி உள்ள ஸ்வீட் காரம் காபி என்கிற வெப் சீரிஸில் நடித்துள்ளார். லட்சுமி, மதுபாலா மற்றும் நிவேதிதா என மூன்று தலைமுறை பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது.
இதன் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு மதுபாலா பேசும்போது, ரோஜா படத்திற்குப் பிறகு நடிப்பதற்கு வாய்ப்பு தரும் படங்கள் நிறைய தேடி வரும் என எதிர்பார்த்தேன். ஆனால் வந்தது எல்லாம் ஆக்சன் படங்கள்.. அதில் நடனம் ஆடுவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி என்றாலும் டான்ஸ், ரொமான்ஸ் என்று ஒரே மாதிரியான கதாபாத்திரங்களாகவே இருந்தது. ஒரு கட்டத்தில் இதுகுறித்து என் பெற்றோரிடம் கூறி நான் கண்ணீர் விட்டு அழுது உள்ளேன்.
தற்போது மீண்டும் திரும்பி நடிக்க வந்த நிலையில் ஹிந்தியில் இருந்து அஜய் தேவ்கனுக்கு அம்மாவாக ஒரு படத்தில் நடிக்க என்னை அழைத்தார்கள். கடந்த 1991ல் நானும் அஜய் தேவ்கனும் ஒரே படத்தின் மூலம் தான் ஜோடியாக அறிமுகமானோம். இப்போது அவருக்கே அம்மாவாக நடிக்க அழைத்தபோது கோபம் தான் ஏற்பட்டது.. நடிக்க முடியாது என மறுத்து அவர்களை திருப்பி அனுப்பி விட்டேன்” என்று கூறியுள்ளார் மதுபாலா.