''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
லட்சுமியும், மதுபாலாவும் இணைந்து நடித்துள்ள வெப் தொடர் 'ஸ்வீட் காரம் காபி'. இதில் இவர்களுடன் சாந்தி நடித்துள்ளார். இந்த தொடரை பிஜாய் நம்பியார், கிருஷ்ணா மாரிமுத்து மற்றும் சுவாதி ரகுராமன் ஆகியோர் இயக்கியுள்ளனர். மூன்று தலைமுறையை சேர்ந்த பெண்கள் ஜாலியாக ஒரு பயணம் கிளம்புகிறார்கள். அந்த பயணத்தில் அவர்கள் சந்திக்கும் அனுபவங்களை 8 எபிசோட்களாக உருவாக்கி இருக்கிறார்கள். இதில் பாட்டியாக லட்சுமியும், மகளாக மதுபாலாவும், பேத்தியாக சாந்தியும் நடித்துள்ளார்கள். வருகிற 6ம் தேதி ஓடிடியில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 10 மொழிகளில் வெளிவருகிறது.
இந்த தொடர் குறித்து இயக்குனர்களில் ஒருவரான பிஜாய் நம்பியார் கூறியதாவது : ஒரு உணர்ச்சிகரமான குடும்ப நாடகம். ஒரே குடும்பத்தின் வெவ்வேறு தலைமுறையைச் சேர்ந்த மூன்று பெண்கள் எவ்வாறு ஒரு நினைவை விட்டு அகலாத வாழ்க்கைப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அவர்களின் அன்றாட வாழ்வின் பரபரப்பில் இருந்து மட்டுமல்லாமல் அவர்கள் மீது திணிக்கப்படும் பண்டைய நடைமுறைகளில் இருந்தும் விடுதலை அடைவதற்கான ஒரு உந்துதலோடு தொடங்கும் இந்த சாலைப் பயணம், அவர்கள் தங்களை மீண்டும் கண்டறியவும் வாழ்வின் மீதான அவர்களின் ஆர்வத்தை புதுப்பித்த ஒரு பயணமாக மாற்றம் காணுகிறது.
என்னோடு இணைந்து கிருஷ்ணா மாரிமுத்து, மற்றும் சுவாதி ரகுராமன் வெவ்வேறு எபிசோடுகளுக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, தங்களின் ஈடு இணையற்ற ஆற்றல் மற்றும் சிறப்பான திறன்கள் மூலம் ஒன்றிணைந்து இந்த கதையை தங்கு தடையின்றி மனதில் நீங்கா இடம் பிடிக்கும் வகையில் காட்சிப்படுத்தி உயிர்பெறச் செய்திருக்கிறார்கள்.
வெவ்வேறு எபிசோட்களை தனிப்பட்ட மூன்று இயக்குனர்கள் இயக்கியிருந்தாலும், இந்தத் தொடரில் கதை கதாபாத்திரங்களோடு இணைந்து எவ்வாறு பயணிக்கிறது என்பதை தீர்மானிப்பதில் நாங்கள் அனைவரும் முழுமையாக ஒன்றிணைந்து செயல்பட்டிருக்கிறோம். தனிப்பட்ட முறையில் நாங்கள் ஒவ்வொருவரும் கதைக் கருவின் ஆழ் மட்டத்துக்கு சென்று ஒன்றிணைந்துள்ளோம். என்றார்.