இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

தமிழ் சினிமா உலகம் மட்டுமல்லாது இந்திய சினிமா உலகமும் திரும்பிப் பார்க்க வைக்கும் படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் ஷங்கர். தற்போது தமிழில் 'இந்தியன் 2', தெலுங்கில் 'கேம் சேஞ்சர்' என இரண்டு பிரம்மாண்டப் படங்களை இயக்கி வருகிறார். இந்த ஆண்டில் இந்த இரண்டு படங்களும் வெளியாகி இந்தியத் திரையுலகத்தில் வசூல் சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஷங்கர் இயக்குனராக அறிமுகமான 'ஜென்டில்மேன்' படம் 1993ம் ஆண்டு வெளியானது. அப்படத்தில் அர்ஜுன் ஜோடியாக மதுபாலா நடித்திருந்தார். அவரது அப்பாவித்தனமான நடிப்பு அன்றைய ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து தமிழில் நிறைய படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டவர். ஆனால், 'செந்தமிழ்ச்செல்வன், மிஸ்டர் ரோமியோ, பாஞ்சாலங்குறிச்சி,' என மூன்று படங்களில் மட்டுமே கதாநாயகியாக நடித்தார். அதே சமயம், ஹிந்திப் பக்கம் போய் நிறைய படங்களில் நடித்தார்.
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. அதற்காக பாலிவுட் பிரபலங்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க மும்பை சென்றுள்ளார். அங்கு தனது முதல் பட கதாநாயகி மதுபாலாவையும் சந்தித்து அழைப்பிதழ் கொடுத்துள்ளார்.
அந்த சந்திப்பு பற்றி மதுபாலா, “எனது அபிமான இயக்குனர் ஷங்கரை சந்தித்த போது,' எனக் குறிப்பிட்டுள்ளார்.