போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
தமிழ் சினிமாவில் ஹீரோயினாக நடித்து இப்போது குணச்சித்ர நடிகையாக அசத்தி வருபவர் சரண்யா பொன்வண்ணன். இவரது கணவரான இயக்குனரும், நடிகருமான பொன்வண்ணனும் சினிமாவில் நடித்து வருகிறார். சென்னை, விருகம்பாக்கம் பகுதியில் இவர்கள் வசித்து வருகின்றனர்.
பார்க்கிங் தொடர்பாக சரண்யாவுக்கும், பக்கத்து வீட்டுக்காரர் ஸ்ரீதேவி என்பவருக்கும் சிறுசிறு தகராறு இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று ஸ்ரீதேவி தனது வாயில் கேட்டை திறந்தபோது அந்த கேட் அருகில் நிறுத்தப்பட்டிருந்த சரண்யாவின் கார் மீது உரசியதாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக சரண்யா - ஸ்ரீதேவி இடைய வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சரண்யா தன்னை தகாத வார்த்தைகளால் திட்டியதாகவும், கொலை மிரட்டல் விடுவதாகவும் கூறி சரண்யா மீது விருகம்பாக்கம் போலீஸில் ஸ்ரீதேவி புகார் அளித்துள்ளார். அதோடு இது தொடர்பாக சிசிடிவி காட்சிகளையும் அவர் சமர்ப்பித்துள்ளார். இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.