ருக்மணி வசந்த்தை கவர்ந்த 10 விஷயங்கள் | தமிழில் தடுமாறும் கதாநாயகியரின் படங்கள்…. | டிசம்பரில் ஓடிடிக்கு வரும் ராஷ்மிகாவின் இரண்டு படங்கள் | ஹிந்தியில் வரவேற்பைப் பெறும் 'தேரே இஷ்க் மெய்ன்' | அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு |

காலத்தால் அழியாத பல படங்களை தனது நடிப்பால் தந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இன்றும் மக்கள் மனதில் வாழும் அவரின் நினைவு தினம் இன்று. இதையொட்டி நடிகர் கமல்ஹாசன் அவருக்கு புகழஞ்சலி சூட்டி உள்ளார். சிவாஜி உடன் குழந்தையாக தான் நடித்த ஒரு படத்தின் போட்டோவையும், தேவர் மகன் படத்தின் ஒரு போட்டோவையும் டுவிட்டரில் பகிர்ந்து. ‛‛திரை நடிப்புக்கென்று ஒரு மைல் கல்லை நிர்ணயித்துச் சென்றிருக்கும் கலைஞர் சிவாஜி கணேசனின் நினைவு நாள் இன்று. ஏதோ ஒரு திரையில் படம் என ஒன்று சலனமுறும் காலம் வரை நடிகர் திலகத்தின் நினைவு தமிழர் நெஞ்சில் அலையடித்தபடியே இருக்கும்.