ரஷ்மி முரளி: தோழி நடிகையைத் தேடிய ரசிகர்கள் | விஜய் படம் ரீ-ரிலீசா… அப்போது அஜித் படமும் ரீ-ரிலீஸ்… | விஷ்ணு விஷால் - ஜுவாலா கட்டா தம்பதிக்கு பெண் குழந்தை | WWE-ல் ராணா டகுபட்டிக்குக் கிடைத்த பெருமை | வீர தீர சூரன் ஓடிடி வாங்கிய விலை இவ்ளோதானா? | ஓடிடி-யில் பெரும் விலைக்கு மோகன்லாலின் எல் 2 :எம்புரான் | புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் |
வினோத் இயக்கிய நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அஜித், அதையடுத்து வலிமை படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தாமதமாகி வந்த நிலையில் தற்போது அந்த காட்சிகளை படமாக்கி வருகின்றனர். வலிமை பிரமோசன்களையும் தொடங்கி விட்ட போனிகபூர், விரைவில் ரிலீஸ் தேதியையும் உறுதிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், மீண்டும் வினோத் இயக்கத்தில் போனிகபூர் தயாரிக்கும் தனது 61ஆவது படத்தில் நடிக்கப்போகிறார் அஜித். இந்த படத்தின் படப்பிடிப்பு வருகிற அக்டோபரில் தொடங்குகிறது. அதோடு வலிமை படத்தை முடிப்பதற்கு இரண்டு ஆண்டுகளாகி விட்டதால் தனது அடுத்த படத்தை ஆறே மாதத்தில் முடித்து 2022 ஆம் ஆண்டு ஏப்ரலில் திரைக்கு கொண்டு வந்துவிடவேண்டும் என்றும் திட்டமிட்டுள்ளாராம் அஜித்.