இந்தாண்டு ஹிட் படமெல்லாம்... முதல் படத்தில் ஜெயித்த இயக்குனர்கள் | ராதிகா பாலிசியை மற்றவர்கள் பின்பற்றுவார்களா? | 10வது படத்திலும் புது இயக்குனரை அறிமுகப்படுத்தும் சிவகார்த்திகேயன் | மீண்டும் கதை நாயகனாக நடிக்கும் முனீஷ்காந்த் | 'கடல் கன்னி' ஆண்ட்ரியா | சமூக வலைதளத்தில் ஆபாச பதிவுகள்: லாவண்யா திரிபாதி போலீசில் புகார் | பிளாஷ்பேக்: தன் படத்தை பார்க்க விரும்பாத விஜயகாந்த் | பிளாஷ்பேக்: தமிழில் படமான உலக சினிமா | 'ஜனநாயகன்' ஓடிடி உரிமை ஒப்பந்தம் ரத்து? | அல்லு அர்ஜுன் பிறந்தநாளில் 'எஎ22 - எ6' பட டீசர் ? |

“உங்க பிரமோஷனுக்கு ஒரு அளவில்லையாப்பா” என்று 'கேஜிஎப் 2' படக்குழுவைப் பார்த்து கேட்கத் தோன்றுகிறது. பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்கும் 'கேஜிஎப் 2' படத்தின் டீசர் ஜனவரி மாதம் வெளியானது. இந்திய சினிமாவில் இதுவரை வெளிவந்த டீசர்களிலேயே சில பல முதன்மை சாதனைகளை அந்த டீசர் படைத்தது.
தற்போது 200 மில்லியன் பார்வைகளை அது யு டியூபில் கடந்துள்ளது. அந்த 200 மில்லியன் சாதனையைக் கொண்டாடும் விதத்தில் டீசருக்கே ஒரு டீசரை வெளியிட்டுள்ளார்கள். 'ராக்கி பாய் மற்றும் அவரது ஆர்மியின் 200 மில்லியன்' என்ற தலைப்பில் டீசரை வெளியிட்டுள்ளார்கள். அதற்குக் கூட இரண்டே நாட்களில் 57 லட்சம் பார்வைகள் கிடைத்துள்ளது.
'கேஜிஎப் 2' படம் மீது ரசிகர்கள் எவ்வளவு ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை இது காட்டுகிறது. இந்திய சினிமாவில் அடுத்து பெரிய வசூல் சாதனையைப் படைக்க உள்ள படங்களுள் இந்தப் படத்தையும் குறிப்பிடுகிறார்கள். விரைவில் இந்தப் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




