நான் ஏன் பிறந்தேன், தம்பிக்கு எந்த ஊரு, துணிவு - ஞாயிறு திரைப்படங்கள் | 'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் |
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள அமலா பால் கடைசியாக நடித்த படம் ஆடை. இந்த படத்தைத் தொடர்ந்து அதோ அந்த பறவை போல, ஆடுஜீவிதம், கடாவர் உள்ளிட்ட படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் அமலா பால்.
அமலா பால் தனது திரையுலக பயணம் மற்றும் பர்சனல் வாழ்க்கை குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் . அதில் கூறியிருப்பதாவது, 'இப்போதும் நான் நானாக இருக்கிறேன். 17 வயதில் சினிமாவுக்கு வந்தேன். என் தனிப்பட்ட வாழ்வில் நான் சந்தித்த விஷயங்கள் சினிமாவிலும், சினிமாவில் நான் சந்தித்த விஷயங்கள் என் வாழ்விலும் பிரதிபலித்தன. இதை எப்படி பிரிப்பது என தெரியவில்லை. 2020ல் என் அப்பா இறந்தது, நான் எதிர்கொண்ட விஷயங்கள் எல்லாம் எனக்கான சுயபரிசோதனை காலமாகவே இருந்தது. திறந்த புத்தமாக என்னை உணர்ந்தேன். எனக்கென்று வாழ்க்கை எதுவும் இல்லை, என் வாழ்க்கை தவறாக புரிந்து கொள்ளப்பட்டதை என உணர்ந்தேன். தற்போது சினிமா வாழ்வையும், ரியல் வாழ்க்கையையும் பிரிக்க முயற்சிக்கிறேன் என்றார்.
ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் சொல்லி வருகின்றனர்.