சகலகலா வல்லவன் ‛ஹேப்பி நியூர்' பாடலை படமாக்கிய ஒளிப்பதிவாளர் பாபு காலமானார் | டிச., 25ல் சிறை ரிலீஸ் : உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட விக்ரம் பிரபு படம் | இமயமலை பயணத்தை நிறைவு செய்த ரஜனிகாந்த் | விஜய் தேவரகொண்டா ஜோடியாக கீர்த்தி சுரேஷ் | 2024 தேசிய விருதுகளுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியீடு | 'டியூட்' மீது அதிக நம்பிக்கை வைத்துள்ள குழு | திருமணமா.. அப்படியே ஹனிமூனையும் சொல்லிடுங்க..!: திரிஷா கிண்டல் | புதுவை முதல்வருடன் தயாரிப்பாளர்கள் சந்திப்பு | போலி சாமியாராக நட்டி | ரஜினி பெயரில் புதிய படம் |
தமிழில் 'ஆடுகளம்' மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் டாப்சி. தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் தயாரிப்பாளராக மாறியுள்ளார். 'சூர்மா, பிகு' படங்களைத் தாயரித்த பிரஞ்சால் காந்தியா என்பவருடன் இணைந்து இந்த படத்தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார்.
அது பற்றி தன்னுடைய டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “இந்தியத் திரைப்படத் துறையில் நான் இறங்கி கடந்த ஆண்டுடன் 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. என் வழியில் நான் நீந்தக் கற்றுக் கொள்வேன் என்பது எனக்குத் தெரியாது. பொதுமக்களிடம் தெரிந்த ஒரு மனிதரா, கனவு காணாத ஒருவருக்கு, என் மீது இத்தனை அன்பையும், என் வேலையின் மீது நம்பிக்கையையும் வைத்த ஒவ்வொருவருக்கும் எனது நன்றி.
இப்போது அதை திருப்பிச் செலுத்துவதற்கான நேரம். அதிக சக்தியுடன் அதிக பொறுப்பும் வருகிறது. சிறந்தவற்றில் சிறந்தவையாக கொடுக்க நான் முயற்சி செய்வேன். வெளியிலிருந்து பார்க்கும் பார்வையே சிறப்பானது. எனது வாழ்க்கையில் மற்றுமொரு அத்தியாயத்தை எழுதுகிறேன். 'அவுட்சைட் பிலிம்ஸ்' மூலம் இப்போது ஒரு தயாரிப்பாகவும் ஆகியுள்ளேன்,”.
இந்த அறிவிப்புடன் கம்பெனியின் லோகோ வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்..