பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மேற்கு வங்கத்தில் நடைபெறும் நிலையில் நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துக் கொடுக்கிறார் ரஜினி. மேலும், அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக ரஜினியின் 169ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 170ஆவது படத்தை தனுசும் இயக்குவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பதோடு, இந்த படங்களோடு ரஜினி சினிமாவுக்கு முழுக்குப்போட திட்டமிட்டிருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ரஜினி வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் சொல்லும் பதில் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது நடிப்புக்கு முழுக்குப்போடும் எண்ணம் ரஜினியிடம் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள். அவரைப் பொறுத்த வரை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டேயிருப்பார். அதிலும் தற்போது வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் ரஜினிக்கு ஆர்வம் மிகுதியாக உள்ளது. அதனால் இன்னும் இரண்டு படங்களோடு ரஜினி நடிப்புக்கு முழுக்குப்போடுவதாக வெளியான செய்தி உண்மையில்லை என்கிறார்கள்.