4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் | கணவர் சித்ரவதை செய்வதாக பாலிவுட் நடிகை வழக்கு | பிளாஷ்பேக் : விஜயகாந்துக்காக மாற்றப்பட்ட கதை | தெலுங்கு பேச பயிற்சி எடுக்கும் பிரியங்கா சோப்ரா | கணவர் மீது புகார் அளித்துள்ள செலினா ஜெட்லி | பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' |

விஷால் நடிக்கும் அவரது 31வது படத்தை அறிமுக இயக்குனர் து.ப.சரவணன் என்பவர் இயக்குகிறார். கதாநாயகியாக டிம்பிள் ஹயாத்தி என்பவர் நடிக்கிறார். இவர்களை தவிர படத்தில் இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் வில்லனாக நடிக்கிறார் மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ். சில மாதங்களுக்கு முன் பஹத் பாசிலின் அண்ணனாக ஜோஜி என்கிற படத்தில் நடித்திருந்தார் பாபுராஜ். பஹத் பாசில் படங்களை ஒன்று விடாமல் பார்த்துவிடும் விஷாலின் கண்களில் பாபுராஜ் படவே, அவரை அழைத்து வந்து தனது படத்தில் வில்லனாக்கி விட்டாராம். .
மலையாள சினிமாவில் வில்லன், குணச்சித்திர நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பல முகங்கள் கொண்ட பாபுராஜ் முன்னாள் நடிகை வாணி விஸ்வநாத்தின் கணவர்.. மேலும் இவர் ஒன்றும் தமிழுக்கு புதியவரல்ல.. ஸ்கெட்ச்' படத்தில் வில்லன்களில் ஒருவராக நடித்தவர். அதுமட்டுமல்ல 15 வருடங்களுக்கு முன் தமிழில் அஜித்தை வைத்து ஷாஜி கைலாஷ் இயக்கிய 'ஜனா' படத்தில் பாபுராஜ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.