தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு | ரஜினி படத்தை தனுஷ் இயக்குவாரா? | ப்ரண்ட்ஸ் ரீ ரிலீஸ் விழா : படக்குழு ஆப்சென்ட் |

தனுஷ் நடித்த அசுரன் படத்தை அடுத்து சூர்யா நடிப்பில் வாடிவாசல் படத்தை இயக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சூரியை வைத்து விடுதலை படத்தை இயக்கத் தொடங்கினார் வெற்றிமாறன். இப்படத்தில் சூரியுடன் விஜய் சேதுபதி, கவுதம் மேனன், பவானிஸ்ரீ உள்பட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
காமெடி நடிகரான சூரியை இந்தபடத்தில் போலீஸ் வேடத்தில் வெற்றி மாறன் நடிக்க வைத்திருப்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சத்தியமங்கலம் காடுகளில் நடைபெற்று வந்த விடுதலையின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது செங்கல்பட்டில் நடக்கிறது.
இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் சூரி போலீஸ் கெட்டப்பில் தோன்றியதில் இருந்தே அவரது சினிமா நண்பர்கள், விடுதலையில் ஆக்சன் அவதாரம் எடுக்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். அதற்கு சூரி, போலீஸ் வேடம் என்பதால் உங்களுக்கு அப்படி தெரிகிறது. ஆனால் இது ஒரு புதுமாதிரியான போலீஸ் கதை. சூரியை இப்படியும் நடிக்க வைக்க முடியும் என்று வெற்றிமாறன் துணிச்சலாக எடுத்து வரும் படம் தான் விடுதலை. ஆக்சன் படமா? அதிரடி படமா? என்பதெல்லாம் நான் சொல்லக்கூடாது. படத்தைப்பார்த்து விட்டு நீங்கள்தான் சொல்ல வேண்டும் என்று தனது கோலிவுட் நண்பர்களிடம் சஸ்பென்சை உடைக்காமல் பேசி வருகிறார் சூரி.