போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை | ஆஸ்கர் லைப்ரரியில் இடம்பிடித்த தமிழர் படம் | பிளாஷ்பேக் : காரில் பயணம் செய்யாத நடிகை | பிளாஷ்பேக் : காப்பி மேல் காப்பி அடிக்கப்பட்ட படம் | கதாநாயகனாகத் தொடரும் சூரி, இடைவெளி விடும் சந்தானம்.. | நான் பெண்ணாக பிறந்திருந்தால் கமலை திருமணம் செய்திருப்பேன் : சிவராஜ்குமார் | ஜிங்குச்சா - கமல்ஹாசன், சிலம்பரசன் நடனத்தில்… முதல்பாடல் நாளை வெளியீடு | 100 கோடி ரூபாய் வீட்டிற்குக் குடிப்போகும் தீபிகா படுகோனே - ரன்வீர் சிங் |
தமிழ் சினிமாவில் கடந்த சில நாட்களாகவே பரபரப்பாக இருக்கும் விஷயங்களில் 'இந்தியன் 2' பட விவகாரமும் ஒன்று. கடந்த வாரம் இயக்குனர் ஷங்கர் அடுத்து இயக்கப் போகும் தெலுங்குப் படம் குறித்த பேச்சு வார்த்தையை படத்தின் தயாரிப்பாளருடனும், நாயகன் ராம் சரணுடனும் நடத்தினார்.
'இந்தியன் 2' படத்தின் கதாநாயகனாக கமல்ஹாசன், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ள 'விக்ரம்' படத்தின் வேலைகளை ஆரம்பித்துவிட்டார். இன்று இப்படத்தின் முதல் பார்வை வெளியாகிறது. விரைவில் படப்பிடிப்பை ஆரம்பிக்கப் போகிறார்கள்.
'இந்தியன் 2' படத்திற்காக இதுவரையில் 200 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்திருக்கிறது தயாரிப்பு நிறுவனமான லைகா. படத்தின் இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவர். படத்தின் நாயகன் கமல்ஹாசன் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களில் ஒருவர். இப்படி இரண்டு பெரும் கலைஞர்கள் தாங்கள் பங்கேற்றுள்ள படத்தை அப்படியே 'அம்போ'வென விட்டுவிட்டு அவர்களது அடுத்த படத்திற்குப் போவது எந்த விதத்தில் நியாயம் என கோலிவுட்டில் கிசுகிசுக்க ஆரம்பித்துவிட்டார்கள்.
தெலுங்கு, கன்னடத் திரையுலகங்கள் பிரம்மாண்டமான பான்-இந்தியா படங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தமிழில் அப்படியான பல கோடி ரூபாய் செலவு செய்து படங்களை எடுக்கும் ஒரே நிறுவனமாக இருக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் இப்படி பிரச்சினை வந்தால் தனது படத் தயாரிப்பை எப்படி தொடரும் என திரையுலகில் உள்ளவர்கள் கவலைப்படுகிறார்கள்.