சம்பளத்தை உயர்த்தினாரா சூரி ? | விதியை மதிக்க மறுத்த அல்லு அர்ஜுன்: ரசிகர்கள் கண்டனம் | சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல்: ஓட்டுப்பதிவு விறுவிறு | பிளாஷ்பேக்: இசைத்தட்டில் இடம் பெறாத எம் கே தியாகராஜ பாகவதரின் பாடல்களும், “சிந்தாமணி” திரைப்படமும் | மாஸ் இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா! | கேரளா டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் 'கூலி' | இயக்குனர் அவதாரம் எடுக்கும் கென் கருணாஸ்! | 'கூலி' பட டிக்கெட் கட்டணம் ரூ.500: தியேட்டர்களுக்கு தரப்படும் அழுத்தம்! | மிஷ்கின் என்னை பாப்பா என்று அழைப்பார்! : ஸ்ருதிஹாசன் | ரஜினிக்கு வாழ்த்து சொன்ன சந்திரபாபு நாயுடு மகன் |
திருமணம் எனும் நிக்காஹ் படத்திற்கு பிறகு அனீஸ் இயக்கி உள்ள படம் பகைவனுக்கு அருள்வாய். சசிகுமார், பிந்து மாதவி, வாணி போஜன், ஹரிஷ் பெரடி, ஜெயபிரகாஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். ஜிப்ரான் இசை அமைக்கிறார், கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை பற்றி அனீஸ் கூறியதாவது: திருமணம் எனும் நிக்காஹ் படத்திற்காக நிறைய ஆய்வுகள் செய்து சைவத்தையும், இஸ்லாத்தையும் இணைத்து அந்த படத்தை இயக்கினேன். அதேபோன்று சிறைச்சாலைகள் குறித்து பல ஆய்வுகள் செய்து சிறைச்சாலைகளின் இன்னொரு முகத்தை பதிவு செய்திருக்கிறேன். பகைவனுக்கு அருள்வாய் என்கிற பாரதியாரின் அறிவுரையை கேட்டு நடந்தால் சிறைச்சாலைகளுக்கு அவசியம் இருக்காது என்பதுதான் படம் சொல்லும் கருத்து.
இந்த படத்தின் சிறப்பு அம்சம் என்னவென்றால் முக்கிய கேரக்டர்களில் சிறையில் வாழ்ந்த முன்னாள் கைதிகள் நடித்திருக்கிறார்கள். பிரபல கன்னட நடிகர் சதீஷ் நீனான்சம் தமிழில் அறிமுகமாகிறார். அனன்யா என்கிற 9 வயது சிறுமி பாடல்கள் எழுதியிருக்கிறார். கொரோனா காலம் முடிந்ததும் படம் தியேட்டரில் வெளியாகும். என்றார்.