மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
பிரபாஸ், பூஜா ஹெக்டே நடித்து வரும் ராதே ஷ்யாம் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ஒரேயொரு பாடல் காட்சியில் அவர்கள் நடித்து முடித்ததும் இம்மாதத்தோடு மொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும். அதையடுத்து படத்தின் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட உள்ளது. மேலும்,1970களில் நடக்கும் ஐரோப்பா பின்னணி கதையில் உருவாகும் இப்படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்க, ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இந்நிலையில் ராதே ஷ்யாம் படம் குறித்து ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது 2010ல் டார்லிங் என்றொரு முழு காதல் கதையில் காஜல் அகர்வாலுடன் இணைந்து நடித்த பிரபாஸ் அதன்பிறகு அதுபோன்ற முழுமையான கதைகளில் நடிக்கவில்லை. அந்த வகையில், 11 ஆண்டுகளுக்குப் பின் இப்போது ராதே ஷ்யாமில் முழுக்காதல் கதையில் அவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது. அதோடு இந்த படத்தில் பிரபாஸ்-பூஜா ஹெக்டே கெமிஸ்ட்ரியும் பெரிய அளவில் ஒர்க்அவுட் ஆகியிருப்பதாகவும் கூறப்படுகிறது.