பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் |
சென்னை 28 உள்பட பல படங்களில் நடித்தவர் விஜயலட்சுமி. டைரக்டர் அகத்தியனின் மகளான இவர், கிருஷ்ணா நடித்த பண்டிகை என்ற படத்தை இயக்கிய பெரோஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அந்த படத்தை விஜயலட்சுமியே தயாரித்திருந்தார். இவர்களுக்கு மூன்று வயதில் நிலன் என்றொரு மகன் இருக்கிறான்.
சமீபத்தில் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது மகன் நிலனுக்கு உதட்டில் முத்தம் கொடுக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் விஜயலட்சுமி. இதை நெட்டிசன் ஒருவர் கொச்சையாக விமர்சனம் செய்து பதிவிட்டிருந்தார்.
இதனால் செம டென்சனாகி விட்டார் விஜயலட்சுமி, அதையடுத்து தனது டுவிட்டரில், ஓ கொழந்தகிட்ட பண்ணவேண்டிய அட்டூழியங்கள்னு ஒரு பேண்டஸி லிஸ்ட வச்சிருக்கியா. பரதேசி. இதை பாத்த உடனே பல்பு எரியுதா. நீங்கள் எல்லாம் நேர்ல வந்து பேசுங்கடா, அழுக்கு ஜென்மங்கள். இதுல அப்பாடக்கர் மாதிரி டுவீட்ஸ். இதுகூட சேந்து டிஸ்கஸ் பண்ண இன்னொரு எச்ச. அடேய் அப்ரசண்டிகளா... என்று கடுமையாக திட்டித் தீர்த்துள்ளார் விஜயலட்சுமி.