என் அப்பா இன்ஸ்டாகிராமில் இருக்கிறாரா? : கல்யாணி பிரியதர்ஷன் ஆச்சர்யம் | எட்டு மாதம் கழித்து கேரளா திரும்பிய மம்முட்டி | தலைப்பிற்காக அழையும் படக்குழு! | ஜாய் கிரிசில்டாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது | வித்யாசாகர் மகனுக்கு ஜோடி யார் தெரியுமா? | ஜனவரி 23ல் திரைக்கு வருகிறதா சூர்யாவின் கருப்பு? | சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கவில்லை : மாளவிகா மோகனன் | சூர்யா 47வது படத்தில் மலையாள நட்சத்திர பட்டாளம் | இது பாகுபலி 3 இல்லை : ராஜமவுலி வெளியிட்ட தகவல் | ஆல்கஹாலை விளம்பரப்படுத்த மறுத்ததால் வந்த சிக்கல் : ரவி மோகன் |

2019ல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்து வெளியான படம் கைதி. எஸ்.ஆர்.பிரபு தயாரித்திருந்தார். இந்த படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்வதற்கும், அதன் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் கேரளா நீதிமன்றம் தடை விதித்துள்ளது. காரணம்,  கேரளாவில் உள்ள கொல்லம் பகுதியைச் சேர்ந்த ராஜீவ் ரஞ்சன் என்பவர், 2007ஆம் ஆண்டு புழல் சிறையில் தனக்கு நேர்ந்த சம்பவங்களை தொகுத்து ஒரு கதையாக எழுதி அதை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடத்தில் சொல்லியிருக்கிறார். கதை பிடித்ததால் அதை படமாக்கலாம் என்று சொல்லி அவருக்கு ரூ.10 ஆயிரம் அட்வான்ஸ் கொடுத்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு. ஆனால் அதன்பிறகு அவரை அழைக்கவே இல்லையாம்.
இந்தநிலையில் சமீபத்தில் கைதி படத்தைப் பார்த்த ராஜீவ் ரஞ்சன் தான் சொன்ன அதே கதையின் இரண்டாம் பாதியை அப்படியே கைதி படத்தில் வைத்து படமாக்கி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அதனால் தனக்கு நஷ்ட ஈடாக தயாரிப்பாளர் எஸ்.ஆ.பிரபு ரூ. 4 கோடி தர வேண்டும் என்று கேரளா மாநிலம் கொல்லம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் ராஜீவ் ரஞ்சன். அவரது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, எஸ்.ஆர்.பிரபுவிற்கு நோட்டீஸ் அனுப்பியதோடு, கைதி படத்தை வேறு மொழிகளில் ரீமேக் செய்யக் கூடாது, அதன் இரண்டாம் பாகத்தையும் எடுக்கக்கூடாது என்று தடை விதித்துள்ளார்.
 
  
  
  
  
  
           
             
           
             
           
             
           
            