ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக விதிக்கப்பட்ட ஊரடங்குகளுக்கான தளர்வுகள் ஒவ்வொரு வாரமும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த வாரத்திற்கான தளர்வுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. அதிலும் தியேட்டர்கள் திறப்புக்கு அனுமதி வழங்கப்படவில்லை. இது தியேட்டர்காரர்களுக்கும், திரையுலகினருக்கும் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது. ஜுலை 15 முதல் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்களைத் திறக்க அனுமதி கிடைக்கும் என அவர்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அடுத்த வார ஊரடங்கு தளர்வு தான் தமிழகம் முழுமைக்குமான ஒரே மாதிரியான தளர்வுகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில் கொரோனா தாக்கம் குறையாத காரணத்தால் அவற்றிற்கு வரும் வாரம்தான் குறிப்பிடத்தக்க தளர்வுகள் கிடைக்க உள்ளன. இப்படி மாவட்டத்திற்கு மாவட்டம் கொரோனா தாக்கத்தில் மாறுபாடு இருப்பதால்தான் தியேட்டர்களைத் திறப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்கிறார்கள்.
பேருந்து, கடைகள் உள்ளிட்டவை மக்களுக்கான அவசியத் தேவைகளாக உள்ளன. சினிமா என்பது பொழுதுபோக்கு அம்சமாகத்தான் இருக்கிறது. மேலும், திருமணம், இறுதி ஊர்வலம் ஆகியவற்றிற்கான கட்டுப்பாடுகள் அப்படியே தான் உள்ளது. மக்கள் அதிகமாகக் கூடுவதைத் தொடர்ந்து தவிர்க்க அரசு வலியுறுத்தி வருகிறது.
எனவே, இந்த ஜுலை மாதத்திலும் தியேட்டர்களுக்கான அனுமதி கிடைக்க வாய்ப்பில்லை என்றே சொல்கிறார்கள். ஆகஸ்ட் மாதத்திலிருந்து வேண்டுமானால் 50 சதவீத இருக்கை அனுமதியுடன் தியேட்டர்கள் திறக்கப்படலாம் என்கிறார்கள்.