ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
சினிமாவில் என்ட்ரி ஆகும் ஒவ்வொரு நடிகருக்குமே அடுத்த ரஜினியாக வேண்டும் என்ற கனவு உள்ளுக்குள் ஒரு ஓரத்தில் இருக்கத்தான் செய்யும். அதை வெளிப்படுத்தும் விதமாக ரஜினி பாணியில் முடியை கோதி விடுவது. நடனமாடுவது என்றெல்லாம் சிலர் ஆசையை வெளிப்படுத்திக்கொள்வார்கள். இன்னும் சிலர் ரஜினி பட தலைப்புகளில் நடித்து தங்களையும் அவராட்டமே நினைத்துக்கொண்டு திரிகிறார்கள்.
அந்த வரிசையில், இதுவரை சிம்பு, தனுஷ் இருவரும் இருந்து வந்தனர். கார்த்தி ரஜினி நடித்த நான் மகான் அல்ல என்ற தலைப்பில் ஒரு படத்தில் நடித்தார். அதையடுத்து இப்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விஜய் நடிக்கும் புதிய படத்திற்கும் ரஜினி நடித்த தங்கமகன் என்ற தலைப்பை வைக்க முடிவெடுத்துள்ளனர். ஏற்கனவே தலைவன் என்ற தலைப்புதான் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்று முடிவு செய்து வைத்திருந்த ஏ.எல்.விஜய் அதே தலைப்பில் இன்னொரு படம் வளருவதால் எதற்கு வீண் பிரச்சினை என்று அந்த தலைப்பை தலைமுழுகி விட்டு, இப்போது விஜய்யை தங்க மகனாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.