தமிழ் ரசிகர்கள் என்னை ஏற்பார்கள் : சம்ரிதி தாரா | மூன்று மொழிகளில் உருவாகும் படம் 'ஓம் சிவம்' | அக்டோபர் 25ல் வெளிவரும் 'வெனம்' கடைசி பாகம் | பிரபு, வெற்றி நடிக்கும் அப்பா மகன் படம் | தெலுங்கு தமிழில் வெளியாகும் சமுத்திரக்கனி படம் | விஜய் 69-வது படத்தின் டெக்னீசியன் விவரம் வெளியானது | கவுதம் கார்த்திக் பிறந்தநாளில் வெளியான 19வது படத்தின் அறிவிப்பு | நவம்பர் 29ல் ஜப்பானில் வெளியாகும் ஷாருக்கானின் ஜவான் | பாலியல் குற்றச்சாட்டில் பிரித்விராஜ் உதவி இயக்குநர் சரண்டர் | ஆண் நடிகரின் பாலியல் குற்றச்சாட்டு பொய் : இயக்குனர் ரஞ்சித்தின் வழக்கறிஞர்கள் ஆதாரம் |
மம்முட்டி நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான படம் ஒன். முதலில் தியேட்டரிலும் பின்னர் ஓடிடி தளத்திலும் வெளியானது. மம்முட்டி, முரளி கோபி, ஜோஜு ஜார்ஜ், சித்திக், மேத்யூ தாமஸ் உள்பட பலர் நடித்திருந்தார்கள். சந்தோஷ் விஸ்வநாத் இயக்கி இருந்தார். ஸ்ரீலட்சுமி தயாரித்திருந்தார். இதில் கேரள முதல்வர் கடக்கால் சந்திரனாக மம்முட்டி நடித்திருந்தார். அரசியல், அரசின் கொள்கைகள், நேர்மையான முதல்வர் எப்படி இருக்க வேண்டும் என்பதை காட்டும் படமாக இருந்தது.
ஸ்டாலின் முதல்வராகி இருக்கும் இந்த நேரத்தில் இந்த படத்தை அதே பெயரில், தமிழில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள். படத்தை இந்தியில் ரீமேக் செய்யும் உரிமத்தை ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் பெற்றுள்ளார். இந்த நிலையில் படத்தை ஜாக்குவார் ஸ்டூடியோ சார்பில் வினோத் ஜெயின் தமிழில் வெளியிடுகிறார். ஏற்கெனவே ஓடிடியில் வெளியாகி இருப்பதால் தியேட்டர் திறப்புக்கு பின் தியேட்டரில் வெளியாகும் என்று தெரிகிறது.