டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் | இந்த வாரம் இரண்டே படம் ரிலீஸ்… | மகா அவதார் நரசிம்மா: பட்ஜெட் 15 கோடி, வசூல் 250 கோடி | சினிமாவில் இருப்பவர்களே சினிமாவை அழிக்கின்றனர்: இயக்குனர் பேரரசு வேதனை |
க்ரித்விக் சினி புரொடக்சன்ஸ் சார்பில் அனுமந்தங்குடி பி.முருகேசன் தயாரிப்பில், ஹென்றி இயக்கும் புதிய படம் ராஜாமகள். இப்படத்தில் ஆடுகளம் முருகதாஸ் கதையின் நாயகனாக நடிக்கிறார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமான முருகதாஸ், ஆடுகளம் படத்தின் மூலம் புகழ்பெற்றதால் ஆடுகளம் முருகதாஸ் என்று அழைக்கப்படுகிறார். இதுவரை 50க்கும் மேற்பட்ட படங்களில் காமெடி மற்றும் குணசித்ர வேடங்களில் நடித்துள்ளார். ராஜாமகள் படத்தின் மூலம் கதை நாயகன் ஆகிறார்.
கன்னிமாடம் புகழ் வெலினா கதையின் நாயகியாக நடிக்கிறார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் புகழ் பக்ஸ், ஜீ தமிழ் புகழ் பேபி பிரிதிக்சா, குக்கூ புகழ் ஈஸ்வர், 100% காதல் புகழ் மாஸ்டர் ஜோஸ்வா, ஆகியோர் நடிக்கிறார்கள். நிக்கி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். சங்கர் ராஜன் இசை அமைக்கிறார்.
புதுமுகம் ஹென்றி இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: பிள்ளைங்க ஆசப்பட்டு கேட்குறப்ப நம்மளோட இயலாமையை காரணம் காட்டி முடியாதுன்னு சொல்லி வளர்த்தா, அதுக்கு பிறகு அவுங்க எதுக்கும் ஆசப்படவே தயங்குகிற ஒரு நிலை உருவாகிறது என்ற மிடில் கிளாஸ் தந்தையின் கருத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. அதே நேரம் தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் பாச போராட்டத்தையும் ஒருங்கே இணைத்து, அழகான கலகலப்பான படமாக உருவாகி இருக்கிறது.
முழுக்க முழுக்க சென்னை சுற்றுவட்டாரங்களிலும், மகாபலிபுரம், திருத்தணி, போன்ற பகுதிகளிலும், இதன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வந்தது. தற்போது இதன் படப்பிடிப்பு முழுவதுமாக நிறைவு பெற்று மற்ற வேலைகள் நடைபெற்று வருகிறது. என்றார்.