பேட் கேர்ள் பட டீசருக்கு சென்சார் வாங்கவில்லையா? | 100வது நாளில் அமரன் படம் | மாற்றி அறிவிக்கப்பட்ட மம்முட்டியின் பஷூக்கா ரிலீஸ் தேதி | 9 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரித்விராஜ் படத்தை இயக்கும் ஜீத்து ஜோசப் | கேரள கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட நாகசைதன்யா | துல்கர் சல்மான் படம் மூலம் மீண்டும் டைரக்சனுக்கு திரும்பும் மின்னல் முரளி ஒளிப்பதிவாளர் | பிளாஷ்பேக் : மூன்றாம் பிறை படத்திற்காக ஸ்ரீதேவிக்கு தேசிய விருது கிடைக்காதது ஏன்? | பிளாஷ்பேக் : ஒரே பிரேமில் 5 சின்னப்பா : 80 வருடங்களுக்கு முன்பே தொழில்நுட்ப சாதனை | எப்படி இருந்த ஷிவானி இப்படி ஆகிட்டாங்களே | ரஞ்சனி சீரியலில் பவித்ரா ஜனனி என்ட்ரியா? |
2018ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹீரோ திரைப்படமான ப்ளாக் பேந்தர் பெரும் வெற்றி பெற்றது. இதில் பிளாக் பேந்தராக நடித்த சாட்விக் போஸ்மேன் உலக புகழ் பெற்றார். ஆனால் சாட்விக் போஸ்மேனின் திடீர் மரணம் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்ததுடன் இதன் இரண்டாம் பாகம் வருமா என்ற சந்தேகத்தையும் எழுப்பியது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போஸ்மேன், கடந்த ஆகஸ்ட் மாதம் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார் . இதனால் ப்ளாக் பேந்தர் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.
இந்தநிலையில் ப்ளாக் பேந்தர் 2ம் பாகத்தின் படப்பிடிப்பு கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு அட்லாண்டாவில் உள்ள பைன்கோன் ஸ்டூடியோவில் தொடங்கப்பட்டது. இதனை மார்வெல் நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தை 6 மாதங்களில் முடிக்க அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்த படத்தில் மறைந்த சாட்விக் போஸ்மேன் கேரக்டர் அப்படியே இடம் பெறுகிறது. அவர் பிளாக் பேந்தராக மாறும் காட்சிகள் கிராபிக்சிலும், நேரடியாக தோன்றும் காட்சிகள் அவர் முதல் பாகத்தில் நடித்து பயன்படுத்தாத காட்சிகளில் இருந்தும் பயன்படுத்த இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் போஸ்மேன் இறந்து விடுவதாகவும், அடுத்த பிளாக் பேந்தராக முதல் பாகத்தில் பிளாக் பேந்தரின் சகோதரி ஷூரி என்கிற கதாபாத்திரத்தில் நடித்த லெடிடா ரைட் மாறுவதாகவும் கதையில் மாற்றம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.