இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
'ஜகமே தந்திரம்' படத்தை அடுத்து தமிழில் தனுஷ் தன்னுடைய 43வது படத்தில் நடித்து வருகிறார். ஹாலிவுட்டில் 'த கிரே மேன்' படத்தில் நடிப்பதற்காக இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்திவிட்டு அமெரிக்கா சென்றார். அங்கு படப்பிடிப்பு முடிந்துவிட்டதால் அடுத்த சில தினங்களில் அவர் இந்தியா திரும்புவார் எனத் தெரிகிறது.
தனுஷ் 43வது படத்தின் படப்பிடிப்பு ஜுலை மாதம் மீண்டும் ஆரம்பமாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள். ஆனால், படப்பிடிப்பு சென்னையில் இல்லையாம், ஐதராபாத்தில் நடைபெற உள்ளதாகச் சொல்கிறார்கள்.
தமிழ்ப் படங்கள் பலவற்றின் படப்பிடிப்பு கடந்த சில வருடங்களாகவே ஐதராபாத்தில் தான் அதிகம் நடக்கிறது. ரஜினிகாந்த், அஜித், விஷால் உள்ளிட்ட நடிகர்கள் அவர்களது படங்களின் படப்பிடிப்பை அங்கு தான் அதிகம் நடத்துகிறார்கள். அந்த வரிசையில் தற்போது தனுஷும் இணைகிறார்.
தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பு சென்னையில் நடந்தால் மட்டுமே இங்குள்ள தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்கும். ஆனால், ஐதராபாத்தில் நடத்தினால் அங்குள்ள தொழிலாளர்கள்தான் வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். அதை மனத்தில் வைத்து நடிகர் விஜய் மட்டும் தான் தனது படப்பிடிப்பை பெரும் பகுதி சென்னையில் வைத்துக் கொள்வார் என கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
கொரோனா காரணமாக கடந்த ஒரு வருடமாகவே சென்னையைச் சேர்ந்த திரைப்படத் தொழிலாளர்கள் வேலையில்லாமல் தவித்து வருகிறார்கள். அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழ்ப் படங்களின் படப்பிடிப்பை ஐதராபாத்தில் நடத்துவது குறித்து இங்குள்ள தொழிலளார்கள் கோபமாக இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.