தீபாவளிக்கு ஜனநாயகன் அப்டேட் ஏனில்லை | பொங்கலுக்கு நடிகர் சங்க கட்டடம் திறப்பு : விஷால் திருமணம் எப்போது | பிக்பாஸில் வந்து விட்டால் மட்டும் நடிகையாகி விட முடியாது: தர்ஷிகா | ஹீரோயின் ஆனார் 'அரண்மனை' ஹர்ஷா | பிளாஷ்பேக் : சென்டிமெண்டில் அமலாவை கவிழ்த்த டி.ராஜேந்தர் | பிளாஷ்பேக்: 2 ஹீரோயின்கள் மோதிய 'மாங்கல்யம்' | சுற்றுலாவில் கீர்த்தி சுரேஷின் தலை தீபாவளி | காதலருடன் தீபாவளி கொண்டாடிய சமந்தா | ரூ.83 கோடி வசூலித்த ‛டியூட்' : 'ஹாட்ரிக்' 100 கோடியில் பிரதீப் ரங்கநாதன் | கர்நாடகாவில் 200 கோடி வசூல் சாதனையில் 'காந்தாரா சாப்டர் 1' |
மாடலிங் துறையில் இருந்து பின்னர் குறும்பட நடிகராகி அதன் பிறகு சின்னத்திரை நடிகர் ஆனவர் அகிலன். தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வருகிறார். என்றாலும் அவ்வப்போது சினிமாவில் தலைகாட்டி வந்தார். த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா, பியார் பிரேம காதல் படங்களில் ஹீரோக்களுக்கு நண்பனாக நடித்தார்.
இப்போது விஷால் நடிக்கும் புதிய படத்தில் இணைந்துள்ளார். இதில் அவர் மிக முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். தற்போது ஐதராபாத்தில் நடந்து வரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக ரவீனா நடிக்கிறார். இதில் டிம்பிள் ஹயாத்தி ஹீரோயின், யோகி பாபு காமெடியன்.
இது தவிர பிரபுதேவா நடித்துள்ள பஹீரா படத்திலும் நடித்து வருகிறார். தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அதுபற்றிய அறிவிப்பு விரைவில் வெளிவர இருக்கிறது.