கர்நாடகாவில் மற்றுமொரு சாதனை படைத்த 'காந்தாரா சாப்டர் 1' | தனுஷ் 54வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்து அப்டேட் ! | சாதியை எதிர்த்துதான் நான் படம் எடுக்கிறேன்! சொல்கிறார் மாரி செல்வராஜ் | சிரஞ்சீவியின் பெயர், குரல், புகைப்படத்தை பயன்படுத்த இடைக்கால தடை போட்ட நீதிமன்றம்! | தகுதிக்கு உரிய சம்பளம் கேட்க தயங்குவதில்லை! - சொல்லுகிறார் பிரியாமணி | பிளாஷ்பேக்: தபால்காரர் தேர்வு செய்த தரமான பாடலுடன் வெளிவந்த “தங்கை” திரைப்படம் | 'பைசன்' படத்திற்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | ஆதங்கத்துடன் புலம்பும் முகமூடி நடிகை | நடிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் நடிகை | மலையூரு நாட்டாமை மனச காட்டு பூட்டாம..: ‛டூரிஸ்ட் பேமிலி' கமலேஷ் |

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2வது சீசன் மூலம் புகழ்பெற்றவர்கள் அஸ்வின், சிவாங்கி. பொதுவாக பிக் பாஸ், குக் வித் கோமாளி, கலக்க போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் இடையே காதல் மலர்வதும், கல்யாணம் செய்த கொள்வதும் சகஜமான ஒன்று.
அந்த வரிசையில் குக் வித்த கோமாளி 2வது சீசனில் மிகவும் நெருக்கமாக காணப்பட்ட அஸ்வினும், சிவாங்கியும் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக இருவரும் திருமணம் செய்து கொண்டதாக திருமண வீடியோவுடன் தகவல் வெளியானது. ஆனால் இந்த வீடியோக்கள் மார்பிங் செய்யப்பட்டவை, நாங்கள் காதலிக்கவும் இல்லை, கல்யாணம் பண்ணிக்கொள்ளவும் இல்லை என்று இருவரும் மறுத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து அஸ்வின் கூறியிருப்பதாவது: எனது திருமணம் பற்றிய தகவல் முற்றிலும் தவறானது மார்பிங் செய்யப்பட்ட சில வீடியோக்கள், படங்கள் இணையத்தில் உலா வருகின்றன. அவை அனைத்தும் எனது பெயரை கெடுப்பதற்காக பரப்பப்படும் தவறான தகவல்கள் என்பதை தெளிவுப்படுத்துகிறேன். எந்த ஒரு சக நடிகையையும் நான் காதலிக்கவில்லை. நான் சிங்கிளாகவே இருக்கிறேன். நான் என்னுடைய சினிமா வாழ்க்கையில் இப்போதுதான் முதல் கட்டத்தில இருக்கிறேன். என்னுடைய தற்போதைய கவனம் வேலையில் மட்டுமே இருக்கிறது. எனக்கு தொடர்ந்து ஆதரவளிக்கும் என்னுடைய ரசிகர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். என்று கூறியிருக்கிறார்.
சிவாங்கி கூறியிருப்பதாவது: என்னையும் என் சக நடிகர் ஒருவரையும் வைத்து மார்பிங் செய்யப்பட்டு வைரலாகும் படங்கள் உண்மைக்கு புறம்பானவை. அது போன்ற தவறான தகவல்களை யாரும் பகிர வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.