புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
தமிழ் சினிமாவில் எவ்வளவோ படங்கள் தோல்வி அடைந்திருக்கின்றன. சில பெரிய நடிகர்களின் படங்களே கூட படுதோல்வி அடைந்து பல கோடி நஷ்டத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. ஆனால், லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நாயகனாக நடித்த 'அஞ்சான்' படத்தின் தோல்வியைப் பற்றி இன்னமும் பலர் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
சமீபத்தில் கூட 'ஜகமே தந்திரம்' படம் வெளிவந்த போது கூட ரஜினிகாந்திற்கு 'பாபா', விஜய்க்கு 'சுறா', சூர்யாவுக்கு 'அஞ்சான்' போல தனுஷுக்கு 'ஜகமே தந்திரம்' என சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டிருந்தார்கள்.
'அஞ்சான்' தோல்வியிலிருந்து மீண்டு 'சண்டக்கோழி 2' படத்தை லிங்குசாமி இயக்கியிருந்தாலும் அப்படமும் வெற்றி பெறவில்லை. இருப்பினும் எப்படியோ தெலுங்கில் முன்னணி நடிகர்களில் ஒருவரான ராம் பொத்தினேனி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றுவிட்டார்.
இன்று அப்படத்தைப் பற்றிய அப்டேட் ஒன்றைக் கொடுத்திருக்கிறார் ராம். டுவிட்டரில், “கடைசி கட்ட கதை முடிந்தது. எப்படி... லிங்குசாமி சார் லவ் யூ, சூப்பர் டூப்பர் கிக்டு....நான் சொல்றேன் கேமராவை ரோல் பண்ணுங்க,” என பெரும் உற்சாகத்துடன் பதிவிட்டுள்ளார்.
இப்படம் தமிழ், தெலுங்கில் தயாராக உள்ளது. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்க 'உப்பெனா' நாயகி கிர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க உள்ளார்.