‛விடுதலை'-க்காக இளையராஜா இசையில் பாடிய தனுஷ் | ‛மைக்கேல்' விமர்சனம் : அனைவரையும் திருப்திபடுத்தும் படைப்பு இல்லை - ரஞ்சித் ஜெயக்கொடி | 'ஏகே 62' இந்த வாரம் அறிவிப்பு வருமா ? | இன்ஸ்டாவில் சண்டை : கடுப்பாகி எச்சரித்த சீரியல் நடிகை | ஷிவின் வெற்றி பெற்றிருந்தால்...? மனம் திறக்கும் கதிர் | படிக்கதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோம்! டிடி வெளியிட்ட ஆக்ஸ்போர்ட் அட்வைஸ் | வாரிசு - 300 கோடி கடந்ததாக விஜய் ரசிகர்கள் செய்யும் 'டிரெண்டிங்' | 800 கோடி வசூலைக் கடந்த 'பதான்' | கீதா கோவிந்தம் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் தேரகொண்டா | மீண்டும் நடிக்கிறார் தங்கர் பச்சான் |
உலக யோகா தினம் சில தினங்களுக்கு முன்பு ஜுன் 21ம் தேதி கடைபிடிக்கப்பட்டது. அன்றைய தினம் பல்வேறு அரசியல், சினிமா பிரபலங்கள் அவர்கள் யோகா செய்யும் புகைப்படங்களைப் பதிவிட்டு யோகா மீதான தங்களது காதலை வெளிப்படுத்தினர். இந்தியா முழுவதும் பல சினிமா பிரபலங்கள் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டனர்.
தமிழ் சினிமா நடிகையும், பிக்பாஸ் 4 பிரபலமுமான ரம்யா பாண்டியன் அன்றைய தினமே யோகா செய்யும் விதவிதமான புகைப்படங்களைப் பதிவிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக இன்றும் மேலும் சில ரம்மியமான புகைப்படங்களைப் பதிவிட்டுள்ளார். அவற்றில் சில கடினமான யோகா முத்திரை புகைப்படங்களம் இடம் பெற்றுள்ளன.
“மூச்சு விடுங்கள், சில போஸ்கள் பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் ஆனால் செய்வது கடினமானது, இது நான் கற்றுக் கொண்ட ஒரு விஷயம். எனது அருமையான குருவுக்கு நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ரம்யா பாண்டியன் தனது உடலை கட்டுக் கோப்பாக வைத்திருப்பதன் ரகசியம் ரசிகர்களுக்குப் புரிந்திருக்கும், அதற்குக் காரணம் யோகா தான் என்று.