பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
'அசுரன், கர்ணன்' என இரண்டு படங்களின் குறிப்பிடத்தக்க வெற்றி மூலம் தனுஷிற்கான மார்க்கெட் நிலவரம் தமிழ் சினிமாவில் நன்றாகவே உயர்ந்தது. நல்ல வேளையாக கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவான 'ஜகமே தந்திரம்' படம் தியேட்டர்களில் வெளியாகாமல் ஓடிடி தளத்தில் வெளியானது. அப்படி தியேட்டர்களில் வெளியாகியிருந்தால் உயர்ந்த தனுஷின் மார்க்கெட்டை அப்படம் நன்றாகவே பதம் பார்த்திருக்கும்.
'ஜகமே தந்திரம்' படம் ஓடிடியில் வெளியானாலும் அதன் தோல்வியையும், கடுமையான விமர்சனங்களையும் மறைக்க தனுஷ் தரப்பிலிருந்து அடுத்தடுத்து சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகிறது.
'ஜகமே தந்திரம்' படம் ஓடிடி தளத்தில் வெளியான ஜுன் 18ம் தேதி, தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ள படத்தின் அறிவிப்பு வெளியானது.
அடுத்ததாக தனுஷ் அவரது அண்ணன் செல்வராகவன் இயக்கத்தில் நடிக்க உள்ள 'நானே வருவேன்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 20ம் தேதி ஆரம்பமாக உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள்.
தனுஷ், ஹாலிவுட் படத்தில் நடிக்கச் செல்வதற்கு முன்பாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனது 43வது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு சில நாட்கள் நடித்தார். தற்போது அமெரிக்காவில் இருந்து திரும்ப வந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பில் தான் கலந்து கொள்வார் எனத் தெரிகிறது. அடுத்தடுத்து மூன்று படங்களில் தனுஷ் நடிக்க உள்ளதால் அவரது ரசிகர்களுக்குக் கொண்டாட்டம் தான்.