'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்குத் திரையுலகத்தில் க்யூட் ஹீரோயின் எனப் பெயரெடுத்த கர்நாடகாவைச் சேர்ந்த ராஷ்மிகா மந்தானா, தமிழில் கார்த்தி நடித்த 'சுல்தான்' படத்தின் மூலம் அறிமுகமானார்.அடுத்து ஹிந்தியில் 'மிஷன் மஞ்சு, குட்பை' ஆகிய ஹிந்திப் படங்களில் நடித்து வருகிறார். மேலும், சில படங்களில் நடிக்க பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இதனால், ஹிந்தியில் அதிக கவனம் செலுத்துவதற்காக மும்பைக்கே குடியேறிவிட்டார்.
சில மாதங்களுக்கு முன்பு அவர் மும்பையில் சொந்தமாக ஒரு பிளாட் வாங்கியதாக செய்திகள் வெளிவந்தன. அங்கேயே குடியேறிவிட்டாரா அல்லது வாடகை வீட்டிற்குச் சென்றுள்ளாரா என்பது குறித்து தகவல் இல்லை.
தெலுங்கில் பிஸியான போது ஐதராபாத்திலும் ஒரு வீடு, புது கார் என வாங்கினார் ராஷ்மிகா. தற்போது தெலுங்கை விட்டு ஹிந்திக்குச் சென்றதும் அங்கும் வீடு வாங்கி செட்டிலாகியுள்ளார். மும்பை வாசம் நிரந்தரமா அல்லது தென்னிந்திய மொழிகளிலும் நடிக்க வருவாரா என்பது இனிமேல்தான் தெரியும்.
பாலிவுட் சென்ற தென்னிந்திய நடிகைகள் தாங்கள் வளர்ந்த மொழிப் பக்கம் மீண்டும் திரும்பிப் பார்த்ததில்லை என்பது தான் கடந்த கால வரலாறு.