ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மலையாளத்தில் பெரும் வெற்றி பெற்ற படம் 'லூசிபர்'. மோகன்லாலின் அசத்தலான நடிப்பில் உருவான இப்படத்தை பிரத்விராஜ் இயக்கியிருந்தார். அரசியல் மற்றும் கேங்ஸ்டர் ஆகிய இரண்டையும் மையமாக வைத்து உருவாகிய இப்படம் வசூல் சாதனையை படைத்தது. இந்த படத்திற்கு இந்திய அளவில் பெரிய வரவேற்பு இருந்தது. தற்போது இந்த படம் பலமொழிகளில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தெலுங்கு உரிமையை நடிகர் சிரஞ்சீவி வாங்கி வைத்திருக்கிறார். 'தனி ஒருவன்' படத்தை இயக்கிய மோகன்ராஜா இயக்குவதாக அறிவிக்கப்பட்டு படத்தின் பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த படத்தின் பணிகளை மோகன்ராஜா செய்து வந்தார். தெலுங்குக்கு ஏற்றாற்போல் கதையில் சில மாற்றங்களை செய்ய சொன்னார் சிரஞ்சீவி. அந்த மாற்றங்களை உடனடியாக செய்துக்கொடுத்தார் மோகன்ராஜா. இதற்கிடையே இந்த படத்திலிருந்து சமீபத்தில் விலகினார் மோகன்ராஜா என்ற தகவல் கசிந்தது. ஆனால் அந்த தகவலை சிரஞ்சீவி தரப்பு மறுத்தது.
இந்நிலையில் படத்தின் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளது. 'ஆச்சார்யா' படத்தின் பணிகளும் தற்போது முடியவுள்ளது. இதையடுத்து விரைவில் சிரஞ்சீவி இந்த படத்தில் இணையவுள்ளார். அதேநேரம் நயன்தாரா இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவர் முதலமைச்சர் மகள் கேரக்டரில் நடிக்கவுள்ளார். இந்த கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடந்து வந்தது. தற்போது தான் நயன்தாரா சம்மதம் தெரிவித்துள்ளார்.