சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

பிரபல மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். பிரேமம் படத்தில் மூன்று நாயகிகளில் ஒருவராக பிரபலமாகி இப்போது தமிழ், தெலுங்கு படங்களிலும் அசத்தி வருகிறார். குறிப்பாக தெலுங்கில் அதிகம் நடித்தார். தற்போது அவர் நடித்துள்ள பர்தா படம் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது. இந்த பட புரொமோஷன் தொடர்பாக அவர் அளித்த பேட்டி ஒன்றில், ‛தில்லு ஸ்கொயர்' படத்தில் வழக்கத்திற்கு மீறிய கவர்ச்சியாக நடித்தது பற்றி பேசி உள்ளார்.
அதில், ‛‛தில்லு ஸ்கொயர் படத்தில் நடித்தபோது எனக்கே சங்கடமாகத் தான் இருந்தது. அப்படியான வேடங்களை தவறு என கூறவில்லை. இருப்பினும் அந்த கதாபாத்திரம் என்னுடைய ரியல் கேரக்டருக்கு எதிரானது. அதில் வசதியில்லாத ஆடைகளை அணிந்தேன். அது எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் கதைக்கு தேவை என்பதால் நடிக்க வேண்டியதாயிற்று. அந்த படம் முடியும் வரை ஒருவித பதட்டத்துடனேயே நடித்தேன். படம் வெளியான பின் அதற்காக எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டேன். ரசிகர்களும் என்னை வெறுத்தனர். இனி தில்லு ஸ்கொயர் மாதிரியான படங்களில் என்னை நடிக்க சொன்னால் நிச்சயம் நடிக்க மாட்டேன்'' என்றார் அனுபமா.