சினிமாவில் 50... வாழ்த்திய பிரதமர் மோடி : நன்றி தெரிவித்த ரஜினி | கூலி படத்தில் மிரட்டிய சவுபின் ஷாகிர், ரச்சிதா ராம் : இவங்க பின்னணி தெரியுமா? | சில கோடி செலவில் ‛கேப்டன் பிரபாகரன்' ரீ ரிலீஸ் : கில்லி மாதிரி வெற்றியை கொடுக்கமா? | கூலி ஆயிரம் கோடி வசூலிக்குமா? | வெளியானது டியர் ஸ்டூடண்ட்ஸ் டீஸர் : ஆக்ஷனில் நயன்தாரா | 8 பெண் உறுப்பினர்கள் : பெண்கள் மயமான புதிய நடிகர் சங்கம் | நான் நாத்திகன் அல்ல; பகுத்தறிவாளன் : கமல் பேச்சு | இட்லி கடை பட டப்பிங் பணிகளை நிறைவு செய்த பார்த்திபன் | மதராஸி பட இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? | பா.ஜ.,வில் சேர்ந்தது ஏன்?: நடிகை கஸ்தூரி விளக்கம் |
நடிகர் ரஜினிகாந்த் சினிமாவில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்கு அரசியல் தலைவர்கள் முதல் திரைப்பிரபலங்கள் வரை பல்வேறு தரப்பினர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியும் ரஜினியை வாழ்த்தி உள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் தமிழில் வெளியிட்ட பதிவில், ‛‛திரைப்பட உலகில் புகழ்மிக்க 50 ஆண்டுகளை நிறைவு செய்யும் திரு ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகள். அவரது பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது. அவரது நடிப்பில் பலவகையான பாத்திரங்கள் தலைமுறைகள் கடந்து மக்கள் மனங்களில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வரும் காலங்களில் அவரது தொடர்ச்சியான வெற்றிக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் வாழ்த்துகிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு நன்றி தெரிவித்துள்ள ரஜினி, எக்ஸ் தளத்தில், ‛‛மதிப்பிற்குரிய மோடி ஜி, உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நான் மிகவும் நன்றியுடையவன். நீண்ட காலமாக மிக உயர்ந்த மரியாதையில் வைத்திருக்கும் ஒரு தலைவரிடமிருந்து இவற்றைப் பெறுவது உண்மையிலேயே கவுரவமாகும். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி'' என குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திரா முதல்வர் வாழ்த்து
இதேப்போல் ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவும் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், ‛‛சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 மகத்தான ஆண்டுகள் திரையுலகில் நிறைவு செய்ததற்கு வாழ்த்துக்கள். அவரது அற்புதமான திரைப் பயணத்தில், தனது பிரமிக்க வைக்கும் நடிப்பால் மில்லியன் கணக்கானவர்களை மகிழ்வித்தது மட்டுமல்லாமல், தனது திரைப்படங்களை சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு ஊடகமாகவும் பயன்படுத்தியுள்ளார். அவரது படைப்புகள் சமூகத்தில் முக்கியமான பிரச்னைகளைப் பற்றி சிந்திக்க வைத்து, எண்ணற்ற உயிர்களை அர்த்தமுள்ள மற்றும் நோக்கமுள்ள வாழ்க்கையால் தொட்டுள்ளன. அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார்.
இவருக்கும் ரஜினி நன்றி தெரிவித்துள்ளார்.