ஓடிடியில் இந்தவாரம் ரிலீஸ் என்ன... | பிரபுதேவாவின் வெப்தொடரின் பெயர் என்ன | அக்., 31ல் விஷ்ணு விஷாலின் ‛ஆர்யன்' ரிலீஸ் | பிளாக் மெயில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | தெலுங்கு திரையுலகை விட்டு ஒதுங்கியது ஏன்? : கமாலினி முகர்ஜி | மும்பையில் உள்ள அபார்ட்மென்ட்டை குறைந்த லாபத்திற்கு விற்ற சோனு சூட் | பிரித்விராஜ் செய்யலாம்.. நான் செய்யக்கூடாதா? : மலையாள குணச்சித்திர நடிகர் கேள்வி | தேசிய விருது பெற்றதற்காக கொடுத்த பார்ட்டியில் பணம் இல்லாமல் பாத்திரம் கழுவ தயாரான ஆசிஷ் வித்யார்த்தி | இனி முத்தக்காட்சியில் நடிக்க மாட்டேன் : நிச்சயதார்த்தம் முடிந்தபின் விஷால் முதல் பேட்டி | புதிய காதலி உடன் முன்னாள் காதலர் : தமன்னா கொடுத்த பதில் |
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவரான நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலர்கள் என்பது இந்த உலகமே அறிந்த விஷயம். இருவரும் முன்பெல்லாம் அடிக்கடி வெளிநாடு சுற்றுலா செல்வார்கள். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவிடுவார் விக்னேஷ் சிவன். அவற்றைப் பார்த்து பலர் பொறாமை கமெண்ட்டுகளையும், வாழ்த்து கமெண்ட்டுகளையும் அள்ளித் தெளிப்பார்கள்.
சமீபகாலமாக இந்த காதல் ஜோடி தனி விமானத்தில் பறப்பதைக் கூட புகைப்படம் எடுத்து அவற்றை மீடியாக்களுக்கு அனுப்பி வைக்கிறார்கள். கொரோனா காலத்தில் லட்சங்களில் செலவு செய்து இந்த தனி விமானப் பயணம் தேவையா என்ற சர்ச்சை கூட வந்தது.
நேற்று இன்ஸ்டாகிராம் தளத்தில் ரசிகர்களுடன் சாட் செய்தார் விக்னேஷ் சிவன். அப்போது ஒரு ரசிகர், நயனுடன் நீங்கள் எடுத்த புகைப்படங்களில் பிடித்தது” எனக் கேட்டிருந்தார். அந்த புகைப்படத்தைத்தான் இந்த செய்தியின் இணைப்புப் புகைப்படமாகப் பார்க்கிறீர்கள்.
மற்றொரு ரசிகர் நயன்தாராவிடம் உங்களுக்குப் பிடித்தது எது ?, என்று கேட்டதற்கு 'அவருடைய தன்னம்பிக்கை' என பதிலளிக்கிறார்.
லிவிங்-டு-கெதர் ஆக இருக்கும் இந்த காதல் ஜோடி எப்போது திருமணம் செய்து கொள்ளப் போகிறது என பலரும் கேட்டுவிட்டார்கள். ஆனாலும், இருவருமே அது பற்றி அமைதியாகவே இருக்கிறார்கள்.